ஷாருக்கானையே கடுப்பேத்திய அட்லி… “இனிமே இப்படி பண்ணாதீங்க”… கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்…

Published on: November 12, 2022
Jawan
---Advertisement---

தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் அட்லி, தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியாமணி என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

Jawan
Jawan

“ஜவான்” திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவியான கௌரி கான் தயாரித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று ஒரு தகவலும் பரவி வருகிறது. சமீப காலமாக ஷாருக்கான் நடித்த எந்த திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட வெற்றிபெறவில்லை. ஆதலால் அட்லி இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்திற்கு ஷாருக்கான் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Atlee and Vijay
Atlee and Vijay

இதனை தொடர்ந்து “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷாருக்கானுக்கும் அட்லிக்கும் ஒரு சிறு விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து ஷாருக்கான் திரைப்படங்கள் தோல்வியடைந்து வந்ததால் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனத்திடம் அதிக பட்ஜெட் இல்லையாம்.

இதையும் படிங்க: சூர்யாவா? ரன்வீரா? ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடக்கும் மோதல்… ஒரு முடிவுக்கு வாங்கப்பா!!

Atlee
Atlee

இந்த நிலையில் அட்லி மிகப்பெரிய அநாவசிய செலவுகளை இழுத்துவைக்கிறாராம். ஆதலால் தயாரிப்பு நிறுவனம், “இத்திரைப்படத்தை எடுப்பதற்காக எவ்வளவு பணம் தேவையோ அதை நாங்கள் தருகிறோம். ஆனால் அந்த பணத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான  காட்சிகள் திரையில் வரவேண்டும். அதை தாண்டி தேவையில்லாத செலவுகளை செய்யக்கூடாது” என அட்லியிடம் ஒரு நிபந்தனையை போட்டுள்ளார்களாம். ஆதலால் மிகவும் கவனமாக “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறாராம் அட்லி.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.