
Cinema News
பாட்ஷாவில் முக்கிய ரோலில் நடிக்க ரஜினிகாந்த் சிபாரிசு செய்த நடிகர் இவர் தான்…!
Published on
இவரது குரலைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் போல இருக்கும். அவ்வளவு வசீகரமானது. நடிப்பில் செம ஸ்மார்ட் லுக்குடன் இருப்பார். அவர் தான் நடிகர் சரண்ராஜ். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.
சரண்ராஜ் ஏப்.27, 1958ல் கர்நாடகாவில் கான்பூர் அருகில் உள்ள பெலகாவியில் பிறந்தார். கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஒடியா படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் கல்பனா சரண் ராஜ். இவருக்கு தேஜ்ராஜ், ஈஸ்வரி, தேவேந்திர ராஜ் என 4 பிள்ளைகள் உள்ளனர்.
Sarajraj, Rajni, Tej
இவரது இயற்பெயர் பிரமானந்தா. நண்பர்கள் வட்டாரத்தில் இவரது செல்லப்பெயர் ப்ரும்மு. இவரது தந்தை உலகின் பல நாடுகளில் இருந்து மரத்தை வாங்கி விற்பனை செய்கிறார். மரம் அறுக்கும் மில்லையும் வைத்துள்ளனர். இவரது சொந்த ஊர் பெல்காம்.
சரண்ராஜ் பள்ளிநாட்களில் நடக்கும் கலாசாரப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
தமிழில் இவர் நடித்த ஜென்டில்மேன், இந்திரன் சந்திரன், வீரா, தர்மதுரை, பாட்ஷா படங்கள் புகழ்பெற்றவை. மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் வந்து ஜென்டில்மேனில் கலக்கி விடுவார்.
Saranraj1
சரண்ராஜ் 2005ல் புதுசா இருக்கு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. சரண்ராஜ் பிரத்திகாதனா என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றுள்ளார்.
கன்னட படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆஷா, தலியா பாக்யா, தாயியா ஹோன், மாருதி மகிமே, ஆப்ரிகாடாலில் ஷீலா, ஹிருதய பல்லவி, சமாரா, தாயிக்ரிங் தொட்டிலு, காட் பாதர் ஆகிய கன்னட படங்களில் சிறப்பாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே போல் பிரத்திகாதனா, ஆரண்யகான்டா, அமெரிக்கா அப்பாயி, டோங்கா மொகுடு, ஸ்வயம் க்ருஷி, இந்துருடு சந்துருடு, சூர்யா ஐபிஎஸ், கார்தவ்யம் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுள்ளார்.
மலையாளப்பட உலகில் ஒலியாம்புகள், லீலம், ரெட் இண்டியன்ஸ், ஜாக்கி/ஜாக்சன், போக்கிரி ராஜா, மணியண்ணன், மதுரா ராஜா ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் 2008ல் வெளியான தோட்டா. இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறன்களை வளர்த்துள்ளார். அண்ணன் தங்கச்சி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்தைப் பற்றி இவர் சொல்லும்போது அவர் மராட்டியக்காரர் என்பதால் பேசும்போது வேகம் இருக்கும். அதனால் தான் தமிழில் கூட டர்ர்ர்னு வேகமா பேசுறாரு. அவரு எனக்கு நல்ல அண்ணன் மாதிரி. பாட்ஷா படத்தில் சான்ஸ் கூட அவர் கொடுத்தது தான்…சரண் இந்தக் கேரக்டர் நீ பண்ணுன்னு சொன்னார். 1987ல் நடித்த நீதிக்குத் தண்டனை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
Saranraj3
குப்பன் என்ற படத்தின் இயக்குனராகிறார். இந்தப்படத்தில் மீனவ இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை. அவரது மகன் தேஜ் தான் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு தந்தையாக நடிப்பவர் சரண்ராஜ். இது ஒரு மீனவனின் சொந்தக்கதை.
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...