பழிக்குப் பழி….வொயிட்வாஷுக்கு வொயிட்வாஷ் – மூன்றாவது போட்டியிலும் இந்தியா தோல்வி !

Published on: February 11, 2020
---Advertisement---

3121095f299a3b5a7d21fd6ae1bb70f3

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா மற்று நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா ராகுலின் அற்புதமான சதத்தால் 296 ரன்கள் சேர்த்தது.

அதையடுத்துக் களமிறங்கிய நியுசிலாந்து அணி ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் விளையாடி வந்தது. அவ்வப்போது விக்கெட்கள் விழுந்தாலும் ஆட்டம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த அணியின் குப்தில் 66 ரன்களும் நிக்கோல்ஸ் 80 ரன்களும் காலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 58 ரன்களும் சேர்த்தனர். இதனால் 47. 1 ஓவரில் வெற்றிக்குத் தேவையான இலக்கை அந்த அணி எட்டியது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 3-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்துள்ளது.

Leave a Comment