
ஆம்பூர் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் இளைஞர் ஒருவர் 1000 ரூபாய் பணம் எடுத்த போது அவருக்கு 10,000 ரூபாய் வந்தது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த சின்னா, லட்சுமணன் என்ற இளைஞர்கள் ஆம்பூரில் உள்ள ஒரு ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது தங்களது சொருகி பின் நம்பர் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்துவிட்டு 1000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் அந்த ஏடிஎம் எந்திரமோ 10,000 ரூபாயை வெளியே அனுப்பியுள்ளது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு காவல்நிலையத்துக்கு சென்று ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் பணத்தையும் விவரத்தையும் பெற்ற காவலர்கள் அவர்களைப் பாரட்டி அனுப்பியுள்ளனர்.