அடி மேல் அடி! பாவம் என்ன பண்ணுவாரோ?…நொந்துபோன முருகதாஸ்….

Published on: February 11, 2020
---Advertisement---

54ea19bc8b49ad53435f161c495b6e95

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்- ரஜினி கூட்டணியில் உருவான தர்பார் திரைப்படம் தொடக்கத்தில் சில 100 கோடிகள் வசூல் என செய்திகள் வெளியானாலும், அப்படத்தல் தங்களுக்கு சில கோடிகள் நஷ்டம் ஆகிவிட்டதாக கூறி அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர்.

ரஜினி அவர்களை சந்திக்க மறுக்க, ஏஜிஎஸ் நிறுவனம் கை விரிக்க, ஏ.ஆர்.முருகதாஸோ தனது அடுத்த படத்திற்காக ஹைதராபாத் பறந்து சென்றுவிட்டார். அதோடு, தனக்கு வினியோகஸ்தர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்.

இந்நிலையில் முருகதாஸ் – அல்லு அர்ஜூன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகவிருந்தது. ஆனால், தர்பார் தோல்வியை சந்தித்ததால் அல்லு அர்ஜூன் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவான ஸ்பைடர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் விஜய்தான் கால்ஷீட் கொடுத்து முருகதாஸை மேலே கொண்டு வந்தார். 

தற்போது மீண்டும் விஜய்தான் முருகதாஸை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment