Connect with us
vanitha_main_cine

television

சுத்தப் பொய்!.பிக்பாஸில் அப்படிலாம் நடக்காது!..அதிருப்தியில் வனிதா விஜயகுமார்!..

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். வாராவாரம் ஒருத்தர் எவிக்ட் ஆகி வரும் நிலையில் கடந்த வாரம் நடிகை மகேஸ்வரி வெளியே அனுப்பப்பட்டார்.

vanith1_cine

பிக்பாஸில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கும் சின்னத்திரை நடிகை ரட்ஷிதாவிற்கு இடையே அவ்வப்பொழுது காதல் தீ பற்றி கொண்டு வருகிறது.

vanith2_cine

இதை பார்த்த ரட்சிதா கணவருக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியது. மேலும் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வரும் நடிகை வனிதா விஜயகுமாரிடம் ராபர்ட்டை பற்றி கேட்டபோது வீட்டிற்கு இருக்கும் ராபர்ட்டே வேற, அவர் வீட்டில் இருக்கும் நடத்தையை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.

vanith3_cine

மேலும் ராபர்ட்டிற்கும் ரட்சிதாவிற்கு இடையே ஏற்பாடு காதல் லீலைகள் ஸ்கிரிப்ட் என பேசி வரும் சில ஊடகங்கள் இதையும் மறுக்கிறார் வனிதா. பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அதுவாகவே நடக்கும் . யாரும் எழுதிக் கொடுத்து நடப்பதில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in television

To Top