நண்பா, நாம ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா? மாஸ்டர் விஜய்யின் கேள்வி

Published on: February 11, 2020
---Advertisement---

2cec5027bc6aaf2374039d24735010a4

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட் கூறிய தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது

இதன்படி ‘மாஸ்டர்’  பட அப்டேட்டுக்கள் மிக மிக விரைவில் வெளியாகும் என்று அந்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ”நண்பா நாம் ஆட்டத்தை ஆரம்பித்து விடலாமா” என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு அளித்த வரும் கமெண்ட்டுக்களால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.

நேற்றுடன் நெய்வேலி படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படம், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Leave a Comment