அப்ப கண்டிப்பா பெரிய சம்பவம் இருக்கு… விஜயை இயக்கும் சூர்யா இயக்குனர்……

Published on: February 11, 2020
---Advertisement---

142964a91d3b438d5b1f8960115c7848

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 64வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. எனவே, விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்குபவர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே சிலரின் பெயர் அடிபட்டாலும் தற்போது விஜயின் 65வது திரைப்படத்தை இயக்கப்போவது இயக்குனர் சுதா கொங்கரா என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மணிரத்தினத்தின் உதவியாளர். இறுதிச்சுற்று படத்தை இயக்கியவர். தற்போது சூர்யாவை வைத்து ‘சூரரை போற்று’ படத்தை இயக்கி முடித்துள்ளார். 

இவர்தான் விஜயின் அடுத்த பட இயக்குனர் என்றும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Leave a Comment