Connect with us

Cinema History

விதவைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த புரட்சிகரமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

பொதுவாக விதவை என்றாலே சமூகத்தில் ஒரு அந்தஸ்து இல்லாமல் தனியாக ஒதுக்கி வைத்து விடுவர். அவர் எதிரே வந்தாலே கெட்ட சகுணமாக பார்க்கும் உலகம் இது. அப்படியிருக்கையில் அவர்களும் மனிதர்கள்தான்.

அவர்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கருதும் தமிழ்ப்பட இயக்குனர்கள் சிலர் விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்து ஆதரவு தருகிறார்கள். அப்படிப்பட்ட படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

குலதெய்வம்

Kula deivam

1956ல் வெளியான படம் குலதெய்வம். சிறுவயதிலேயே லதா விதவையாகிறாள். அவளது அக்காள் உடன் வாழ்ந்து வருகிறாள்.

அக்காளின் கொழுந்தன் சின்னையாவுடன் கள்ளம் கபடமின்றிப் பழகுகிறாள். அதுவே காதலாகிறது. அவ்வீட்டுக்குப் புதிதாக மருமகளாக வரும் பெண் விதவை விதவையாகவே வாழ வேண்டும். சின்னையாவோடு பேசக்கூடாது என்கிறாள்.

பொருளாதார ரீதியாக குடும்பம் சிதற, லதா அக்காள் குடும்பத்துடன் போய் விடுகிறாள். சின்னையா வேலை தேடி பம்பாய் செல்கிறான்.

ஆண்டுகள் உருண்டோட, அக்காளின் கணவனும் இறந்து விடுகிறான். பம்பாயில் இருந்து சின்னையா திரும்புகிறான். இறந்த தன் மூத்த அண்ணனின் விருப்பப்படி அந்த இளம் விதவையையே மணந்து கொள்கிறான்.

முரசொலி மாறன் கதை எழுத, கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியுள்ளனர். எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்தான லெட்சுமி, பண்டரிபாய், எஸ்.எஸ்.ஆர், சந்திரபாபு, எம்.என்.ராஜம், விஜயகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.சுதர்சனம் இசை அமைத்துள்ளார்.

விதவை மறுமணம் கடுமையாக எதிர்க்கப்பட்ட காலத்தில் இந்தப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவள் ஒரு தொடர்கதை

Aval oru thodarkatahi

1974ல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியானது அவள் ஒரு தொடர்கதை. தனது தங்கை விதவை. அவளது திருமணம் எப்படியாவது நடக்க வேண்டும் என்று கருதும் அக்கா தனது காதலைத் தியாகம் செய்கிறாள்.

தங்கைக்கும் தன் காதலனுக்கும் திருமணம் செய்து வைத்து சந்தோஷப்படுகிறாள். கமல், ஜெய்கணேஷ், ஸ்ரீபிரியா, சுஜாதா நடிப்பில் வெளியான படம். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர்.

சிப்பிக்குள் முத்து

Sippikkul muthu

1986ல் வெளியான சிப்பிக்குள் முத்து படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவான விதவைப் பெண்ணை நாயகன் திருமணம் செய்கிறான். உலக அனுபவமே இல்லாத அவனை நாயகி புரிய வைத்து திருத்துகிறாள்.

பிறகு அவர்களுக்கும் சில குழந்தைகள் பிறந்து பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். கமல்ஹாசன், ராதிகா, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் முத்து முத்தான பாடல்கள் உள்ளன.

தளபதி

1991ல் வெளியான தளபதி படத்தில் மணிரத்னம் விதவையான நாயகியை பொட்டு வைத்து மணந்து கொள்கிறான். கதை என்னவென்று பார்த்தால் ரொம்பவே வித்தியாசமாகப் போகிறது.

அந்தப் பெண்ணின் கணவனைக் கொன்றதே அந்த நாயகன் தான். அதிலும் இயக்குனர் நியாயமான காரணத்தை வைத்துள்ளார். அவன் தவறு செய்ததனால் தான் நாயகன் கொன்றுள்ளான்.

ரஜினி, ஷோபனா, மம்முட்டி, அரவிந்த்சாமி நடிப்பில் சூப்பர்ஹிட்டான படம். இளையராஜா இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.

இளையவன்

2000ல் வெளியான படம் இளையவன். படத்தை இயக்கியவர் பாபு. நாயகன் தன்னைக் கவர்ந்த நாயகியை விடாமல் துரத்தி துரத்திக் காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் அவள் கணவனை இழந்த விதவை என்பது தெரியவருகிறது.

அப்போது இதோடு அந்தக்காதல் முடிவுக்கு வந்துவிடும் என்று பார்த்தால் அப்போதுதான் இன்னும் அதிகமாகிறது. காதல் தீவிர காதலாகிறது.

கடைசியில் இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பது தான் கதை. சத்யன், கௌசல்யா, கரண், வையாபுரி நடித்த படம். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

ரிதம்

Rhythm

2000ல் வெளியான படம் ரிதம். வசந்த் இயக்கியது. மனைவியை இழந்த நாயகன், கணவனை இழந்து ஒரு குழந்தையுடன் தவிக்கும் நாயகியை மறுமணம் செய்து கொள்கிறான்.

நாயகனின் மனைவியும், நாயகியின் கணவனும் ஒரே ரயில் விபத்தில் இறந்தவர்கள் என்பது தான் கதையின் டச்.

அர்ஜூன், ஜோதிகா, மீனா, ரமேஷ் அரவிந்த், லட்சுமி, நாகேஷ், ரம்யா கிருஷ்ணன், ராஜூ சுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் நச்சென்று இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top