இயக்குனர் இமயத்தையே அசிங்கப்படுத்திய முன்னணி நடிகர்… ஆனா இயக்குனரின் பதில் என்ன தெரியுமா?

Published on: November 18, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருக்கும் பாலசந்தர் கதையை கேட்காமல் இருந்தும் டைம் பாசுக்காக அவரை கதை சொல்ல வைத்திருக்கிறார் டாப் நாயகன் ஒருவர்.

கே.பாலசந்தரின் தொடக்க காலத்தில் எல்லா இயக்குனர்கள் போல அவருக்கு நிறைய சிக்கல்கள் இருந்தது. தெய்வத்தாய், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் கதாசிரியராக பணியாற்றி இருந்தார். இயக்குனராகும் முயற்சியில் கதையை ஏற்பாடு செய்துகொண்டு காதல் மன்னன் ஜெமினி கணேசனிடம் கதை சொல்ல சென்று இருக்கிறார்.

gemini ganesan

கே. பாலசந்தரின் கதையை கேட்காத ஜெமினி கணேசன். அவரை ஒவ்வொரு முறையும் நாளைக்கு வா என அனுப்பி விடுவாராம். பல நாட்கள் கடந்தாலும் ஜெமினியை பார்ப்பதை மட்டும் கே பாலசந்தர் நிறுத்தவே இல்லை. இதற்கு ஒருநாள் நல்ல பதிலும் ஜெமினிகணேசனிடம் கிடைத்தது. நாளைக்கு வா கதை கேட்கலாம் எனக் கூறினார். இவருக்கோ தலைக்கால் புரியவில்லை. சரி நாளைக்கு சொல்லி ஓகே வாங்கிவிட வேண்டும் எனக் காலையில் கிளம்புகிறார்.

ஆனால் ஜெமினியோ வெளியில் கிளம்ப தயாராகி உட்கார்ந்து இருக்கிறார். நான் அவசரமாக பம்பாய் செல்கிறேன். வீட்டில் இருந்து விமான நிலையம் செல்ல ஒருமணி நேரம் ஆகும். நீ அப்படியே கதை சொல்லிவிடு எனக் கூறினாராம். பாலசந்தர் சரி நமக்கு நேரம் கிடைத்ததே போதும் என நினைத்தாராம்.

gemini ganesan

காரில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். ஜெமினி பின்சீட்டில் இன்னொருவருடன் அமர்ந்தாராம். பாலசந்தர் தனது கதையை ஆரம்பிக்க, ஜெமினியோ அதை கேட்காமல் பக்கத்தில் இருந்தவருடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறார். இதனால் பாலசந்தர் கதை நிறுத்த நீ கதையை சொல்லுப்பா என்கிறார் ஜெமினிகணேசன். கடைசி வரை அவரின் கதையை கேட்காத ஜெமினி விமான நிலையத்தில் இறங்கி சரி நான் சொல்கிறேன் என சென்று விட்டார்.

ஆனால் இதற்கு கே.பாலசந்தர் கோபம் கொள்ளவில்லையாம். மாறாக இவரை வைத்து எப்படியாவது படம் பண்ணியே ஆகவேண்டும் என தீர்மானம் கொண்டாராம். அதை செய்தும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.