அஜித்குமார்தான் கெத்துன்னு நினைச்சேன் ஆனால்?? உண்மையை உடைத்த பிரபல அம்மா நடிகை…

Published on: November 19, 2022
Ajith Kumar
---Advertisement---

“தல” என்று அழைக்கப்படும் அஜித்குமார், தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான ரசிகர்களை தனது கைக்குள் போட்டுக்கொண்டவர். தொடக்கத்தில் காதல் மன்னனாக திகழ்ந்து வந்த அஜித்குமார், அதன் பின் அல்டிமேட் ஸ்டாராக உயர்ந்தார். எனினும் சில மாதங்களுக்கு முன்பு தன்னை “தல” என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதே போல் “அல்டிமேட் ஸ்டார்” என்ற பட்டத்தையும் துறந்தார்.

Ajith Kumar
Ajith Kumar

துணிவு VS வாரிசு

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே பொங்கல் தினத்தன்று விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வெளியாக உள்ள  நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளன. ஆதலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக வெறிகொண்டு இத்திரைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Varisu vs Thunivu
Varisu vs Thunivu

மூவர் கூட்டணி

Boney Kapoor and Ajith
Boney Kapoor and Ajith

இயக்குனர் ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக அஜித்குமார் இணைகிறார். இதற்கு முன் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அதே போல் இத்திரைப்படங்களை போனி கபூர்தான் தயாரித்தார். இந்த நிலையில் “துணிவு” திரைப்படத்தின் மூலம் அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Ajith and H.Vinoth
Ajith and H.Vinoth

பத்திரிக்கையாளர்களை சந்திக்காத அஜித்:

அஜித்குமார் பல வருடங்களாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஆதலால் தனது திரைப்படங்களின் புரோமோஷனுக்கு கூட வருவதில்லை. எனினும் அஜித்குமார் “துணிவு” திரைப்படத்தின் புரோமோஷனுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான் என பலரும் கூறிவருகின்றனர்.

Ajith Kumar
Ajith Kumar

சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே நமக்கு நினைவில் வருவது சரண்யா பொன்வண்ணன்தான். குறிப்பாக “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இவ்வாறு தமிழ் சினிமாவின் டாப் அம்மா நடிகையாக திகழ்ந்து வரும் சரண்யா பொன்வண்ணன், “கிரீடம்” திரைப்படத்தில் அஜித்திற்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சீயான் விக்ரம் இப்படிப்பட்டவரா?? உயிர் நண்பனை இப்படியா அவமானப்படுத்துறது??…

Saranya Ponvannan
Saranya Ponvannan

படப்பிடிப்பில் அஜித்குமார்

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரண்யா பொன்வண்ணன் அஜித்குமார் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

“கிரீடம் படத்தில் அஜித்திற்கு அம்மாவாக நடித்தேன். அஜித்குமார் படப்பிடிப்பில் கெத்தாக இருப்பார், அவர் வைத்ததுதான் சட்டம் என்று நினைத்து வந்தேன். ஆனால் கிரீடம் படப்பிடிப்பில்தான் அஜித்குமார் ஒரு தங்கமான மனதுடைய குழந்தை என்று தெரிய வந்தது.

Kireedam
Kireedam

என்னைக் கேட்டால் அழகன் என்றால் அது அஜித்குமார்தான். வெள்ளைக்காரன் மாதிரி இருப்பார். நம் ஊரில் வெள்ளைக்காரன் என்றால் அஜித்தைத்தான் காட்டமுடியும். ஆனால் மிகவும் எளிமையானவர். அவருக்கு வரும் வசனங்களை பிறர் பேசினால் நன்றாக இருக்குமே என அவர் நினைத்தால் மற்றவருக்கு அந்த வசனத்தை கொடுத்துவிடுவார். இதெல்லாம் ஒரு மாஸ் ஹீரோ செய்யவேண்டிய அவசியம் கிடையாது. எனக்கு அஜித் மிகவும் பிடித்த நபர்” என அப்பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.