Cinema History
ஷோபா தற்கொலை மர்மம்… “அது எனக்கு மட்டும்தான் தெரியும்”… பாலு மகேந்திரா மறைத்த உண்மை என்ன??
1970களில் வெளிவந்த “முள்ளும் மலரும்”, “மூடுபனி”, “பசி” போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் ஷோபா. இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவும் ஷோபாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 1980 ஆம் ஆண்டு ஷோபா தற்கொலை செய்துகொண்டார்.
17 வயதில் தேசிய விருது
ஷோபா 1960களில் தமிழ், மலையாளம், ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “உத்ராத ராத்ரி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் “அச்சாணி”, “முள்ளும் மலரும்”, “பசி” போன்ற பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக இதில் “பசி” திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அப்போது அவரது வயது 17.
பாலு மகேந்திராவுடனான காதல்
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலு மகேந்திரா 1977 ஆம் ஆண்டு கன்னடத்தில் “கோகிலா” என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படத்தில் ஷோபாதான் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பாலு மகேந்திரா இயக்கிய முதல் திரைப்படமாக “கோகிலா” அமைந்தது. இத்திரைப்படத்தில் பணியாற்றியபோதே பாலுமகேந்திராவுக்கும் ஷோபாவுக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஷோபா “நிழல் நிஜமாகிறது” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம் தாமதமாக வெளிவந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஷோபா கதாநாயகியாக நடித்த “அச்சாணி” திரைப்படம் வெளிவந்துவிட்டது.
ஷோபனாவுக்காக படத்தை நிறுத்திய இயக்குனர்
பாலு மகேந்திரா “அழியாத கோலங்கள்” என்ற திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார். அதில் ஷோபா நடிப்பதாக இருந்தது. இத்திரைப்படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியபோது “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த திரைப்படத்தில் பாலு மகேந்திரா பணியாற்ற ஒப்புக்கொண்டதற்கான காரணம் ஷோபாதான் என கூறப்படுகிறது.
அதாவது “அழியாத கோலங்கள்” திரைப்படத்தில் ஷோபா ஒரு சிறு கதாப்பாத்திரல்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரம். ஆதலால் “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியற்றினால் ஷோபாவை மிகவும் அழகாக காட்சிப்படுத்தலாம் என பாலு மகேந்திரா நினைத்தாராம். ஆதலால்தான் “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் பணியாற்ற பாலு மகேந்திரா ஒப்புக்கொண்டாராம்.
ஷோபா தற்கொலை
1979 ஆம் ஆண்டு வெளிவந்த “பசி” திரைப்படத்திற்காக ஷோபாவிற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த தேசிய விருது பெற்ற தருணத்தையும், “பசி” திரைப்படத்தின் 100 ஆவது நாள் விழாவையும் கொண்டாட அத்திரைப்படத்தின் இயக்குனர் துரை ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அந்த விழா நடைபெறவிருந்த நாள் அன்று காலையில் ஷோபா தூக்கில் தொங்கினார்.
இதையும் படிங்க: “தப்பான பொண்ணுங்ககிட்டத்தான் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்பாங்க”.., வாய் விட்டு மாட்டிக்கொண்ட பிரபல காமெடி நடிகை…
பாலு மகேந்திராதான் காரணம்
ஷோபாவை பாலு மகேந்திரா திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே அவருக்கு ஒரு மனைவியும் குழந்தையும் இருந்தது. “ஷோபாவை திருமணம் செய்துகொண்ட பின்பும் தன்னுடைய முதல் மனைவியின் வீட்டில்தான் பாலு மகேந்திரா தங்கினார். தன்னுடைய மகனை பார்க்கச் செல்வதற்காகத்தான் பாலு மகேந்திரா அங்கு போகிறார் என அவர் கூறினாலும் ஷோபாவால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆதலால்தான் ஷோபா தற்கொலை செய்துகொண்டார்” என பல பத்திரிக்கைகள் அப்போது செய்திகள் வெளியிட்டன.
“எனக்கு மட்டும்தான் தெரியும்”
ஷோபாவின் மரணத்திற்கு பிறகு பாலு மகேந்திராதான் ஷோபாவின் தற்கொலைக்கு காரணம் என அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் பாலு மகேந்திரா இது குறித்து அப்போதைய பேட்டி ஒன்றில் “ஷோபாவுக்கும் எனக்கும் இருந்த உறவை பற்றி எனக்கும் அவளுக்கும் மட்டும்தான் தெரியும். அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள், அதற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அந்த விஷயத்தை நான் எப்போதும் கூறமாட்டேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.