உலக சினிமாவின் உன்னத நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது திரைப்பயணத்தை பற்றி அறியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள்.குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக கலைப்பயணத்தில் மிதந்து கொண்டு வருகிறார்.
கமல் கட்சி ஆரம்பம்
மக்கள் மீது தனக்கு இருக்கும் அக்கறையை காட்ட விரும்பிய கமல் 2018 ஆம் ஆண்டு அரசியல் கட்சியில் குதித்தார். சொந்தமாக சின்னத்தையும் கொடியையும் உருவாக்கி ‘மக்கள் நீதி மையம்’ என்ற பெயரில் தனிக் கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பித்த சில காலங்களில் கட்சி விறுவிறுப்பாக போக ஏதோ சில காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இருந்தாலும் விடா முயற்சியால் தன் கட்சியை கட்டி அணைத்துக் கொண்டு வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இவருடன் பயணித்த திரைப்பிரபலம் பாடலாசிரியர் சினேகன். பிக்பாஸில் கலந்து கொண்டு வெளியே வந்ததும் கமல் மீதுள்ள பிரியத்தால் மக்கள் நீதி மையக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்த கமல்
கட்சியில் இணைந்ததில் இருந்தே கமலுக்கு ஆதரவாக பக்க பலமாக ஒரு விசுவாசியாகவே மாறிவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய கமல் கட்சி சார்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார். அப்போது அந்த கூட்ட விவாதத்தில் தன் தொண்டர்களிடம் கமல் ‘யாருமே பூங்கொத்து, அன்பளிப்பு, பூமாலை என எதையும் கையில கொடுக்க கூடாது’ என கறாராக கூறிவிட்டாராம்.

ஆனாலும் அந்த கட்சியிலேயே இருக்கும் சினேகன் தன் மனைவியுடன் வந்து கமலை சந்தித்திருக்கிறார். வந்தவர் கையில் பூங்கொத்து கொண்டு வந்து கமல் பக்கத்தில் இருந்து போட்டோ எடுத்துக்கொண்டு போய்விட்டாராம். இதனால் கடுங்கோபத்திற்கு ஆளானாராம் கமல். சொன்னதை மீறியும் இப்படி செய்து விட்டாரே என்ற ஆதங்கத்தில் இருந்த கமல் சினேகனுடன் பேசவில்லையாம். இதனால் கடும் அதிப்திக்கு ஆளாகிவிட்டாராம் சினேகன்.
10 கோடி இழப்பு
ஏனெனில் சினேகன் முதலில் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைய போகிறார் என்ற தகவல் வெளியானதும் அவரை பாஜகவில் இணைக்க ஒரு கூட்டம் 10 கோடி கொடுக்க தயாராக இருந்ததாம். ஆனாலும் கமல் மேல் உள்ள பிரியத்தால் அந்த 10 கோடி வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு மக்கள் நீதி மையத்தில் வந்து இணைந்திருக்கிறார் சினேகன். ஆனால் ஒரு சின்ன பூங்கொத்தால் கமல் இந்த அளவுக்கு பண்ணுகிறாரே என்று மிகவும் வருத்தப்படுகிறாராம் சினேகன். இந்த செய்தியை வலைப்ப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.

