“ச்சீ… எனக்கு இந்த தண்ணிலாம் வேண்டாம்”… குற்றால அருவியில் கண்டிஷன் போட்ட ஜெய்… என்னவா இருக்கும்?

Published on: November 23, 2022
Jai
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஜீரோ ஹேட்டர்ஸ் உள்ள நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெய். இவரது திரைப்படங்களை ரசிப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

Jai
Jai

விஜய்க்கு தம்பியான ஜெய்

“பகவதி” திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஜெய் நடித்த முதல் திரைப்படம் ஆகும். எனினும் “சென்னை 28” திரைப்படத்தில் இருந்துதான் ஜெய் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். “சென்னை 28” திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் நடித்த “சுப்ரமணியபுரம்” திரைப்படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.

Bhagavathi
Bhagavathi

அதனை தொடர்ந்து “சரோஜா”, “எங்கேயும் எப்போதும்” போன்ற பல திரைப்படங்களில் ஜெய் நடித்தார். ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான “காஃபி வித் காதல்” ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.

இசையமைப்பாளர் ஜெய்

கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த “வீரபாண்டியபுரம்” திரைப்படத்திற்காக ஜெய் இசையமைத்திருந்தார். ஜெய்க்கு சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் உண்டு. இசையமைப்பாளர்களான தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ்-முரளி ஆகியோர் ஜெய்க்கு நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai in Veerapandiyapuram
Jai in Veerapandiyapuram

அர்ஜுனன் காதலி

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜெய், பூர்ணா ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் “அர்ஜுனன் காதலி”. இத்திரைப்படத்தை பார்த்தி பாஸ்கர் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் “பம்பரக் கண்ணாலே” என்ற திரைப்படத்தை இயக்கியவர். இத்திரைப்படத்தை சிவசக்தி மூவிஸ் சார்பாக சிவசக்தி பாண்டியன் தயாரித்திருந்தார். ஐங்கரன் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் சில பொருளாதார காரணங்களால் இத்திரைப்படம் வெளிவரவில்லை.

Arjunan Kadhali
Arjunan Kadhali

சேரனின் சி 2 ஹெச்

கடந்த 2015 ஆம் ஆண்டு சேரன் தொடங்கிய “Cinema 2 Home” என்ற நிறுவனத்தின் மூலம் “அர்ஜுனன் காதலி” திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் கூட வெளியானது. ஆனால் இத்திரைப்படம் வெளிவராமலே போனது.

இதையும் படிங்க: பத்திரிக்கையாளரை பிளான் போட்டு கடத்திய விஜய் படக்குழுவினர்… தயாரிப்பாளரின் வீட்டுக்கு பறந்து வந்த நோட்டீஸ்… சிக்கலில் “வாரிசு”…

Arjunan Kadhali
Arjunan Kadhali

கண்டிஷன் போட்ட ஜெய்

இந்த நிலையில் “அர்ஜுனன் காதலி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார். அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சி குற்றாலத்தில் படமாக்கப்பட்டதாம். அந்த காட்சியில் ஜெய் மழையில் நனைவது போன்று எடுக்கப்பட இருந்ததால், குற்றால அருவியின் தண்ணீரை குழாய் வழியாக இழுத்து ஒரு செயற்கை மழையை உண்டு செய்தார்களாம்.

Arjunan Kadhali
Arjunan Kadhali

இதனை பார்த்த ஜெய், அத்திரைப்படத்தின் இயக்குனரிடம் “நான் இப்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இப்படி நான் குற்றாலத் தண்ணீரில் நனைந்தபடி நடித்தால் எனக்கு சளி பிடித்துவிடும். சளி பிடித்துவிட்டால் படங்களில் நடிப்பது கடினமாகிவிடும். நீங்கள் எப்படி குற்றால தண்ணீரை பயன்படுத்தலாம்” என கோபத்தில் கத்திவிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே போய்விட்டாராம். இதன் பிறகு படக்குழுவினர் வேறு ஒரு ஏற்பாட்டை செய்தார்களாம். அதன் பிறகுதான் ஜெய் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.