“விஜயகாந்த்தான் எனக்கு மிகப்பெரிய தலைவலி”… பொது மேடையில் ஓப்பனாக போட்டுடைத்த சத்யராஜ்…

விஜயகாந்த்தின் பெருந்தன்மையை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் கேள்விபட்டிருப்பார்கள். தன்னிடம் உதவி என்று வருபவர்களை காக்க வைக்காமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை செய்துகொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார் விஜயகாந்த். அதே போல் அவரிடம் பசி என்று யார் வந்தாலும் தாங்கிக்கொள்ள மாட்டார். உடனே அவரை சாப்பிட வைத்துவிட்டு வயிறார அனுப்புவார் விஜயகாந்த்.

Vijayakanth
Vijayakanth

ரயிலை நிப்பாட்டிய விஜயகாந்த்

விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது சக நடிகர்களுடன் வெளியூரில் கலை நிகழ்ச்சி நடத்தி முடித்துவிட்டு அனைவரையும் தனி ரயிலில் ஏற்றிக்கொண்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சக நடிகர்கள் யாரும் சாப்பிடாமல் இருந்தது தெரிய வந்தது.

Vijayakanth
Vijayakanth

உடனே ரயிலை செயினை பிடித்து இழுத்து நிப்பாட்டி, ரயிலில் இருந்து இறங்கிய விஜயகாந்த், வெகு தூரம் நடந்து ஒரு ஹோட்டலை கண்டுபிடித்தார். அந்த ஹோட்டலில் இருந்த அனைத்து உணவுகளையும் ஆள் வைத்து தூக்கிக்கொண்டு வந்தாராம் விஜயகாந்த். இவ்வாறு தனது அருகில் இருப்பவர்களின் பசியை போக்க எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்குவார் விஜயகாந்த்.

சக நடிகரை மதிப்பது

அதே போல் சக நடிகரிடமும் விஜயகாந்த் பெருந்தன்மையாக நடந்துகொள்வாராம். விஜயகாந்த் நடித்த “நெறஞ்ச மனசு” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சம்பத். அத்திரைப்படம் சரியாக போகவில்லை. இதனை தொடர்ந்து விஜயகாந்த் “பேரரசு” திரைப்படத்தில் நடித்தபோது அத்திரைப்படத்தின் இயக்குனரிடம் “சம்பத்தை ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வையுங்கள். அவர் நெறஞ்ச மனசு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. அவரை இத்திரைப்படத்தில் நடிக்க வைத்தால் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என மக்களுக்கு தெரியவரும்” என கூறினாராம்.

இதையும் படிங்க: “இப்போதும் ரஜினி வாங்கும் சம்பளம் ஒரு ரூபாய் தான்”… அடேங்கப்பா!! இது நம்ம லிஸ்டலயே இல்லையே…

Actor Sampath
Actor Sampath

அதன் பிறகு அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் சம்பத் கலந்துகொண்டபோது அவரிடம் “நீங்கள் நெறஞ்ச மனசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தீர்கள். ஆனால் இந்த படத்திலோ உங்களுக்கு சின்ன கதாப்பாத்திரம். ஆதலால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி எனக்காக நடிங்க” என கூறினாராம். இந்த தகவலை சம்பத் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டபோது அவரது கண்களில் லேசாக கண்னீர் வந்துவிட்டதாம். அதாவது அந்த வாய்ப்பை சம்பத்திற்கு வாங்கி கொடுத்தவர் விஜயகாந்த்தான். ஆனால் சம்பத்திடம் தனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என கூறியுள்ளார். விஜயகாந்த்தின் பெருந்தன்மையை பாருங்கள்.

சத்யராஜ் புலம்பல்

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் கலந்துகொண்ட ஒரு பொது மேடையில் பேசிய சத்யராஜ் “நான் சினிமாவில் சம்பாதிக்க தொடங்கியபோது வீடு வாங்கலாம், கார் வாங்கலாம் என நினைப்பேன். அப்போது நாட்டில் எதாவது பிரச்சனை வரும். விஜயகாந்த் அள்ளிக்கொடுத்துவிடுவார். விஜயகாந்த் இவ்வளவு லட்சம் கொடுத்திருக்காரே, அதில் பாதியாவது கொடுத்தால்தான் நம் பெயரை காப்பாற்றமுடியும் என நினைத்து நான் கொடுத்துவிடுவேன். இவரது இம்சை பெரும் இம்சையாக இருக்கும்” என நகைச்சுவையாக கூறினார்.

Vijayakanth and Sathyaraj
Vijayakanth and Sathyaraj

மேலும் பேசிய அவர் “அள்ளிக்கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அதை நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். ஒரு நல்ல விஷயத்திற்கான நிர்பந்தத்தை உருவாக்குவதற்கு ஒரு ஆள் வேண்டும். அப்படி நான் முன்னுக்கு வருவதற்கு பல நிர்பந்தங்களை உருவாக்கியவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த்தான்” என கூறியது குறிப்பிடத்தக்கது.