Connect with us
Jaishankar

Cinema History

“ஜெய்சங்கர் அந்த தவறை செஞ்சிருக்ககூடாது”… தென்னகத்து ஜேம்ஸ் பாண்டின் வாழ்க்கையை தலை கீழாக்கிய சம்பவம்…

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய டாப் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்  தனது தனித்துவமான நடிப்பால் மக்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் “இரவும் பகலும்”. இத்திரைப்படத்தில் ஜெய்சங்கருக்கு வாய்ப்பு கிடைத்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

Jaishankar

Jaishankar

வாழ்க்கையில் விளையாடிய கண்கள்

ஜெய்சங்கர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு தனது நெருங்கிய நண்பரான சோ.ராமசாமியின் நாடக கம்பெனியில் இணைந்து பல நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது குட்டி கண்கள் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனினும் அதே குட்டி கண்களால்தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பும் வந்தது. அப்போது பிரபல இயக்குனராக இருந்த ஜோசஃப் தெலியத், இப்படிப்பட்ட குட்டிக் கண்களை கொண்ட நடிகர்தான் இந்த படத்திற்கு தேவை என கூறி அவரை “இரவும் பகலும்” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இவ்வாறு கண்களால் பறிப்போன வாய்ப்பு, அதே கண்களால் திரும்ப வந்திருக்கிறது.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்

ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் துப்பறியும் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்ததால் அவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அழைத்தனர். அதே போல் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட Cow Boy வகையரா திரைப்படங்களை போலவே பல திரைப்படங்களில் ஜெய்சங்கர் நடித்தார். “கங்கா”, “ஜக்கம்மா”, “காலமே வெல்லும்” போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இவ்வாறு புதுமைக்கு பெயர் போனவராக திகழ்ந்தார் ஜெய்சங்கர்.

Jaishankar

Jaishankar

வில்லனாக ஜெய்சங்கர்

இவ்வாறு தமிழின் முன்னணி நடிகராக விளங்கி வந்த ஜெய்சங்கர், ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்கத் தொடங்கினார். அவர் வில்லனாக நடித்த முதல் திரைப்படம் “முரட்டுக் காளை”.

ரஜினிகாந்த் நடித்த “முரட்டுக் காளை” திரைப்படத்தில் முதலில் வில்லனாக ஒப்பந்தமானவர் விஜயகாந்த். ஆனால் அவரது நெருங்கிய நண்பரான ராவுத்தர், அவரை வில்லனாக நடிக்க அனுமதிக்கவில்லை. ஆதலால் வாங்கிய அட்வான்ஸையே திருப்பி கொடுத்துவிட்டார்.

Actor Vijayakanth

Actor Vijayakanth

அதன் பிறகுதான் ஏவிஎம் நிறுவனம் ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தது. ஜெய்சங்கர் “முரட்டுக் காளை” திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமான போதும் அவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் ஜெய்சங்கர் வில்லனாக என்று நடிக்க தொடங்கினாரோ அப்போதே அவர் ஹீரோவாக சரியத் தொடங்கிவிட்டார் என ஒரு பேட்டியில் கூறுகிறார் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன்.

ஜெய்சங்கரின் சரிவு

இது குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய சித்ரா லட்சுமணன் “ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் முரட்டுக் காளை திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார். இது அவர் எடுத்த தவறான முடிவு என்று நான் நினைக்கிறேன்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: வேறு வழியின்றி ரஜினிக்கு தந்தையாக நடித்த சத்யராஜ்… எல்லாம் சிபி பிறந்த நேரம்தான்…

Murattu Kaalai

Murattu Kaalai

மேலும் பேசிய அவர் “முரட்டுக் காளை படம் வெளிவந்த சமயத்தில் கூட ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் வெளிவந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் அவர் கதாநாயகனாக நடிக்க கூடிய வாய்ப்புகள் குறைந்துபோனதோ என்ற சந்தேகம் எழுகிறது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top