
Cinema News
‘பாட்ஷா’ படத்திற்கு இளையராஜாவா?.. வேண்டாம் என ஒத்தக்காலில் நின்ன ரஜினி!.. ஏன்னு தெரியுமா?..
Published on
By
ரஜினியின் கெரியரிலேயே மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் ‘பாட்ஷா’.1995 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்க படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
ரஜினி
தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இந்த படம் ஹிந்தியில் வெளியான ஹம் என்ற படத்தின் கருவில் உருவான கதைகளம் ஆகும். இந்த படத்தின் ஆலோசனைகள் அண்ணாமலை படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே ரஜினியும் சுரேஷ் கிருஷ்ணாவும் ஆலோசித்திருக்கின்றனர்.
செல்வமணியிடம் பாட்ஷா
இந்த நிலையில் 90களில் காலடி எடுத்த வைத்த இயக்குனர் செல்வமணியிடம் பாட்ஷா பட விவாதத்திற்கு முன் ரஜினி ஹம் படத்தின் ஒன் லைன் கதையை சொல்லி எடுக்க முடியுமா என்று கருத்து கேட்டாராம். செல்வமணிக்கும் பிடித்துப் போக பண்ணலாம் என கூறியதும் இசை ஏ.ஆர்.ரகுமானை கமிட் செய்யலாம் என்று ரஜினி சொன்னாராம்.
ஆனால் செல்வமணி சினிமாவில் நுழைந்ததில் இருந்து இளையராஜாவுடன் தான் பயணித்திருக்கிறார். அதுவும் போக அவருடன் நல்ல நெருக்கமான நட்பும் இருந்து வந்திருக்கிறது. ரஜினி கூறியதை கேட்டு ஷாக் ஆன செல்வமணி அது என்னால முடியாது இளையாராஜா தான் செட் ஆகும் என கூற ரஜினி இளையராஜாவா? வேண்டாம், இப்ப உள்ள என் ரசிகர்கள் ஏஆர். ரகுமானை தான் விரும்புகிறார்கள்.
ரஜினி பாட்ஷா
ஆகவே ரஹ்மானை ஓகே பண்ணலாம் என கூறியிருக்கிறார். ஆனால் செல்வமணியோ இளையராஜானு சொல்லிக் கொண்டே இருந்தாராம். உடனே ரஜினி அவரதுமகளை அழைத்து ‘செல்வமணி-இளையராஜா-ரஜினி மற்றும் செல்வமணி-ஏஆர்.ரஹ்மான் – ரஜினி இதுல எந்த காம்போ நல்லா இருக்கு?’ என கேட்டாராம்.அவர் மகளும் செல்வமணி-ஏஆர்.ரஹ்மான் – என் அப்பா என்று கூறியிருக்கிறார்.
சில்வர் ஜூப்ளி படம்
உடனே ரஜினி பார்த்தீர்களா? ரசிகர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும். ஆகவே ஸ்கிரிப்டை தயார் செய்து வாருங்கள், எனக்கு இது 25 வருட படமாகும், பிரம்மாண்டமாக இருக்கனும் என கூறி மேலும் இந்த படத்தை பண்ணும் போது வேறெந்த படத்தையும் புக் செய்யக் கூடாது என்ற கண்டீசனும் போட்டிருக்கிறார் ரஜினி.
ஆனால் செல்வமணிக்கு தெரியாமலேயே விஜயகாந்தின் அடுத்த படம் செல்வமணி இயக்கத்தில் என்று ராவுத்தர் ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்க அதை பார்த்த ரஜினி செல்வமணியை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். எந்த படமும் வேறு இல்லை என்று சொன்னீர்கள்? இப்பொழுது அடுத்த படம் விஜயகாந்துடன் என்று செய்தி வந்திருக்கிறதே என்று கேட்டாராம் ரஜினி.
செல்வமணி
இதற்கு செல்வமணி விஜயகாந்துடன் இப்பொழுது பன்ணவில்லை. அது ராவுத்தர் வியாபார ரீதிக்காக போட்டிருக்கிறார் என்று கூற ரஜினி ‘ஒரு வேளை ஒரே நேரத்தில் என் படம் விஜயகாந்த் படம் வந்தால் யார் பக்கம் போவாய்’ என்று கேட்டாராம். இவரோ விஜயகாந்த் தான் என்று சொன்னதும் அதுவும் சரி தான். அப்போ நாம் அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று பாட்ஷா படத்தில் இருந்து செல்வமணி விலகியிருக்கிறார். இந்த தகவலை செல்வமணியே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...