Cinema News
பிரபல காமெடி நடிருக்கு நேர்ந்த பரிதாபம்… “என்னை தப்பு தப்பா பேசுறாங்க”… மனைவி கொடுத்த கண்ணீர் பேட்டி…
“வெண்ணிலா கபடிக் குழு”, “குள்ளநரி கூட்டம்”, “நான் மகான் அல்ல” போன்ற பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் ஹரி வைரவன். இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சக்கரை நோய் ஏற்பட்டது.
கை, கால் வீக்கம்
சக்கரை நோயை தொடர்ந்து இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. மேலும் இதனை தொடர்ந்து இறுதய நோயும் தாக்கியுள்ளது. இவ்வாறு பல வியாதிகளின் தாக்கத்தால் முகம், கை, கால்கள் வீக்கமடைந்து இவரால் 11 ஆண்டுகள் எழுந்து நடக்கமுடியவில்லை.
சிகிச்சை
இந்த நிலையில் அவரது மனைவியின் நகைகளை எல்லாம் விற்று சிகிச்சை செய்து வரும் நிலையில், தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் வைரவன். பல ஆண்டுகளாக அவரது மனைவிதான் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டு வருகிறார். அவர் உடையை கூட மனைவிதான் மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு பரிதாப நிலையில் இருக்கிறார் வைரவன். நோயின் தாக்கத்தால் ஆள் பார்ப்பதற்கே வித்தியாசமாக மாறி இருக்கிறார்.
6 மாதங்கள்
சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த செய்திகளில் வைரவனுக்கு மருத்துவர்கள் 6 மாதங்கள்தான் கெடு விடுத்திருக்கிறார்கள் என கூறப்பட்டது. எனினும் அவரது மனைவியின் தீவிர முயற்சியினால் தற்போது வைரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கண்ணீர் பேட்டி
வைரவனின் மனைவி பல முறை மீடியாக்களின் மூலம் மக்களிடம் பண உதவி கேட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார் வைரவனின் மனைவி.
“எங்களுக்கு சிகிச்சைக்கான பணம் போதவில்லை. எல்லாரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், இவங்களுக்கு என்னப்பா, நிறைய மீடியா பேட்டி எடுக்க வர்ராங்க, காசு தராங்க, புருஷனை வைத்து காசு சம்பாதிக்கிறாள் என பேசுகிறார்கள். எனது நிலைமையில் இருந்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அப்போதுதான் எனது கஷ்டம் உங்களுக்கு தெரியும்” என மிகவும் வருத்தத்தோடு தனது நிலையை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: “திமிரு பிடிச்ச பெண்ணை அடக்கி காட்டிய ரஜினிகாந்த்”… படம் பார்த்துவிட்டு ஜெயலலிதா அடித்த கம்மென்ட் என்ன தெரியுமா??
மேலும் கண்ணீர் மல்க பேசிய அவர் “என்னுடைய சில பேட்டிகளை பார்த்துவிட்டு எனக்கு தொடர்பு கொண்டு மிகவும் தவறாக பேசுகிறார்கள். நிறைய நபர்கள் எனக்கு பொருளாதார உதவி செய்திருக்கிறார்கள். ஆனாலும் வைரவனுக்கு சிகிச்சைக்கான பணம் போதவில்லை.
தெய்வம்தான் துணை
திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணை. எங்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லதோ கெட்டதோ நீ பார்த்து செய் கடவுளே என கடவுளிடம் விட்டுவிட்டேன். இவர் எனக்கு சம்பாதித்துத் தரவேண்டும் என்றெல்லாம் எண்ணமில்லை. இவர் எழுந்து நடந்து அவரது அன்றாட வேலைகளை பார்த்தால் கூட போது. நான் வேலைக்கு சென்று சம்பாதித்து இவரை பார்த்துக்கொள்வேன்” என அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.