Cinema News
கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய ரஜினிகாந்த்… ராதாரவி சொன்ன பஞ்ச் டயலாக்!! இப்படியா பண்றது??
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் தனித்த ஆளுமை மிக்க உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட உச்ச நட்சத்திரம் தன்னை நேரில் அழைத்து அசிங்கப்படுத்தியதாக ஒரு சம்பவத்தை சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் ராதாராவி.
அருணாச்சலம்
1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்பா, சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அருணாச்சலம்”. இதில் ரகுவரன், விகே ராமசாமி, நிழல்கள் ரவி ஆகியோர் வில்லன்களாக நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
“அருணாச்சலம்” திரைப்படம் அதுவரை வந்த ரஜினி திரைப்படங்களிலேயே மிகவும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது.
வித்தியாசமான கதை
அருணாச்சலம் ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வர, ஒரு நாள் தான் ஆதரவில்லாதவன் என தெரியவருகிறது. அப்போது வீட்டில் இருந்து வெளியேறி சென்னைக்கு வரும் அருணாச்சலத்திற்கு, தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்த வேதாச்சலத்தின் ஒரே மகன் என தெரியவருகிறது.
மேலும் 30 நாட்களுக்குள் 30 கோடியை செலவு செய்தால், 300 கோடி கிடைக்கும் என தனது இறந்துபோன தந்தை ஒரு டாஸ்க் வைத்திருக்கிறார் எனவும் தெரியவருகிறது. ஆனால் இதற்கு பல நிபந்தனகளையும் போடுகிறார் தந்தை. அருணாச்சலம் இந்த சவாலில் வெற்றி பெறக்கூடாது எனவும், வேதாச்சலத்தின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் எனவும் வில்லன்கள் திட்டம் போடுகின்றனர். இந்த நிலையில் அருணாச்சலம், அந்த நிபந்தனைகளுக்குட்பட்டு 30 கோடியை 30 நாளில் செலவு செய்தாரா இல்லையா? என்பதே கதை.
மூன்று மாநில விருதுகள்
“அருணாச்சலம்” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில வழங்கப்பட்டது. அதே போல் இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் சூப்பர் சுப்பராயனுக்கு சிறந்த ஸ்டண்ட் இயக்குனருக்கான மாநில விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கலை வடிவத்திற்காக கோபிகாந்த்திற்கும் மாநில விருது வழங்கப்பட்டது. இவ்வாறு அந்த வருடத்தின் மூன்று மாநில விருதுகளை இத்திரைப்படம் பெற்றது.
பி.வாசு
“அருணாச்சலம்” திரைப்படத்தை முதலில் பி.வாசுதான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராதாரவி, “அருணாச்சலம்” திரைப்படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டார்.
அவமானப்படுத்திய ரஜினி
“இயக்குனர் பி.வாசு என்னிடம் அருணாச்சலம் என்ற ரஜினி திரைப்படத்தை தான் இயக்குவதாகவும் அதில் நான் வில்லனாக நடிப்பதாகவும் கூறினார். திடீரென்று ரஜினிகாந்த் ஒரு நாள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவரது வீட்டிற்கு வரச்சொன்னார்.
அவரது வீட்டிற்குச் சென்றபோது ஓடி வந்து தலைவா என காலில் விழுந்தார். நானும் அவர் காலில் விழுந்தேன். இது எல்லாம் வெறும் நடிப்புத்தான். நாங்கள் நடிகர்கள்தானே. அதன் பின் நாங்கள் இருவரும் மது அருந்தினோம். அப்போது ரஜினிகாந்த், ‘அருணாச்சலம் படத்தை பி.வாசு இயக்கவில்லை. இயக்குனரை மாற்றிவிட்டோம். சுந்தர்.சிதான் இயக்கப்போகிறார். அதே போல் கதையில் மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளனர். ஆதலால் நீங்கள் நடித்தால் சரிவராது’ என என்னிடம் கூறினார்.
இதையும் படிங்க: “மகனாக நடித்த நடிகருடன் டூயட் பாடனுமா??”… ‘நோ’ சொன்ன பானுமதி… உள்ளே புகுந்து டிவிஸ்ட் வைத்த என்.எஸ்.கே.
இவ்வாறு என்னை கூப்பிட்டு வைத்து சொன்னால் எனக்கு எப்படி இருக்கும் என்பது ஒரு நடிகனாக இருந்து பார்த்தால்தான் தெரியும். இப்படி நம்மை அசிங்கப்படுத்துகிறாரே என நினைத்தேன். அப்போது ரஜினியிடம் ‘சினிமாவின் தலை எழுத்து என்ன தெரியுமா சார்?’ என அவரிடம் கேட்டேன்.
அவர் ‘என்ன?’ என கேட்டார். நான் அவரிடம் “இந்த திறமை, இந்த அதிர்ஷ்டத்தை நோக்கி வரவேண்டியதாக இருக்கிறது’ என கூறினேன். முதலில் அவருக்கு புரியவில்லை. அதன் பின் மீண்டும் கூறியபோது சத்தமாக சிரித்தார். அப்போதே தெரிந்துவிட்டது அவர் என் கதையை முடித்துவிட்டார் என்று” என அப்பேட்டியில் ராதாரவி தனக்கு நடந்த சம்பவத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.