பொறியியல் மாணவனிடம் தனியாக சிக்கிய பள்ளி மாணவி – 6 நாட்கள் தொடர் வன்புணர்வு !

Published on: February 12, 2020
---Advertisement---

63298c30f10cf20252ddfe1e8548cb35

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவி ஒருவரைக் கடத்தி அடைத்து வைத்து தொடர் பாலியல் வல்லுறவு செய்த இளைஞனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் அரியலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பகுதி அனைக்கரை. அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதாகும் பள்ளி மாணவியைக் காணவில்லை என் அவரது பெற்றோர் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அது சம்மந்தமாகப் போலீஸார் பலரையும் விசாரித்து வந்தனர். ஆனால் 6 நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மேல் சந்தேகம் வர அவனைக் கண்காணித்துள்ளனர் போலீஸார். அப்போது அவன் தன்னுடைய வீட்டில் மாணவியை அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க மாணவி பல முறைப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவியிடம் நெருக்கமாக பழகிய அந்த இளைஞன் தங்கள் வீட்டில் யாரும் இல்லை என சொல்லி அம்மாணவியை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார் அந்த மாணவன்.

அவனை நம்பி சென்ற மாணவியை 6 நாட்களாக வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனை நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

Leave a Comment