“கேரளாவில் விஜய்க்கு அம்புட்டு ரசிகர்கள்.. ஆனால்??’… தளபதி மலையாள படத்தில் நடிக்காததற்கான காரணம் என்ன தெரியுமா??

Published on: November 28, 2022
Vijay
---Advertisement---

தமிழ் சினிமாவின் “தளபதி” ஆக வலம் வரும் விஜய், தமிழ் நாட்டின் பெரும்பான்மையான ரசிகர்களை தனது கைக்குள் போட்டுக்கொண்டவர். பிரபல இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக இருந்தாலும், விஜய் பல அவமானங்களை தாண்டியே இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

Vijay
Vijay

இளைய தளபதி டூ தளபதி

விஜய் நடித்த முதல் திரைப்படம் “நாளைய தீர்ப்பு”. இத்திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சரியாக போகவில்லை. இந்த நிலையில் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதியவைப்பதற்காக எஸ்.ஏ.சி ஒரு திட்டத்தை தீட்டினார்.

அதாவது விஜய்யை வைத்து இயக்கும் இரண்டாவது திரைப்படத்தில் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். எஸ்.ஏ.சி, விஜயகாந்த்தை வைத்து “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் விஜயகாந்தின் சினிமா பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Senthoorapandi
Senthoorapandi

ஆதலால் எஸ்.ஏ.சி மேல் விஜயகாந்த்திற்கு ஒரு தனி மரியாதை இருந்தது. இந்த மரியாதை காரணமாக விஜயகாந்த் பணம் வாங்காமலே நடிக்க ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து விஜயகாந்த், விஜய் ஆகியோர் இணைந்து நடித்த “செந்தூரபாண்டி” என்ற திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஏ.சி.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து விஜய் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற விஜய்யின் நடிப்பு மிகவும் பிடித்துப்போன ரசிகர் ஒருவர் இளைய தளபதி என்று பட்டம் கொடுத்தார். இந்த நிலையில்தான் தனது மூன்றாவது திரைப்படமான “ரசிகன்” என்ற திரைப்படத்திலேயே இளைய தளபதி என்ற டைட்டிலை போட்டுக்கொண்டார் விஜய். இப்போது ரசிகர்களின் தளபதியாக உயர்ந்து நிற்கிறார் விஜய்.

கேரளாவில் விஜய்…

விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவிலும் பல ரசிகர்கள் உண்டு. விஜய்யின் திரைப்படத்தை கேரள ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக வரவேற்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் விஜய்க்கு ஒரு சிலையையே நிறுவினார்கள். அந்த அளவிற்கு வெறித்தனமான விஜய் ரசிகர்கள் கேரளாவில் உண்டு.

இதையும் படிங்க: “மேக்கப்லாம் கிடையாது… நிஜ கலர்”… அந்த படத்தில் இப்படித்தான் சூர்யா கருப்பாக மாறினார்??… அடேங்கப்பா!!

Vijay Statues
Vijay Statues

பட்ஜெட் பத்தல..

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான அந்தணனிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில், “விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் பலர் இருந்தும், ஏன் அவர் மலையாள திரைப்படங்களில் நடிப்பதில்லை?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

Vijay
Vijay

அதற்கு பதிலளித்த அந்தணன் “மலையாள திரை உலகம் குறைந்த பட்ஜெட்டிலேயே இயங்கி வருகிறது மேலும் அவர்கள் அந்த கச்சிதமான பட்ஜெட்டில் உணர்வுரீதியான பல திரைப்படங்களை உருவாக்குவார்கள். அங்கே சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரின் சம்பளம், விஜய் சம்பளத்தை விட மிக மிக குறைவு. ஆதலால்தான் விஜய்யை வைத்து அவர்கள் படம் எடுக்க முடியவில்லை” என கூறியிருந்தார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.