Cinema News
கோமாளி இயக்குனருக்கு இரண்டு முறை ‘நோ’ சொன்ன எஸ்.ஜே.சூர்யா… என்னவா இருக்கும்??
சமீபத்தில் வெளிவந்த “லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களிடையே மிகப் பிரபலமாக ஆகியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் இதற்கு முன் இயக்கிய “கோமாளி” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தாலும், “லவ் டூடே” திரைப்படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
“லவ் டூடே” திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
5 கோடி-70 கோடி
“லவ் டூடே” திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இதில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
“லவ் டூடே” திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 5 கோடிதான் என கூறப்படுகிறது. ஆனால் இத்திரைப்படம் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றித் திரைப்படமாக “லவ் டூடே” அமைந்திருக்கிறது.
ஆப் லாக்
5 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் “ஆப் லாக்” என்று ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார். அதில் ஒரு பெண் தனது தந்தையிடம் தான் ஒரு பையனை காதலிப்பதாக கூறுவார். தந்தை அந்த பையனை நேரில் வந்து சந்திக்கச் சொல்வார்.
இதையும் படிங்க: “கேரளாவில் விஜய்க்கு அம்புட்டு ரசிகர்கள்.. ஆனால்??’… தளபதி மலையாள படத்தில் நடிக்காததற்கான காரணம் என்ன தெரியுமா??
அடுத்த நாள் அவரவர்களது மொபைல்களை மாற்றிக்கொள்ளுங்கள் என கூறுவார். “ஒரு நாள் பயன்படுத்திப் பாருங்கள். நாளை இருவரும் இன்னமும் காதலிக்கிறீர்கள் என்றால் நான் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் ” என கூறுவார். அதற்கு அடுத்த நாள் இருவரும், அவருக்கு முன் வந்து நிற்பார்கள். இதோடு அந்த குறும்படம் முடிந்துவிடும். இந்த குறும்படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து “லவ் டூடே” என்ற திரைப்படமாக உருவாக்கி இருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
நோ சொன்ன எஸ்.ஜே.சூர்யா
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரதீப் ரங்கநாதன் எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.
“எஸ்.ஜே.சூர்யா சாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய பல முறை முயற்சி செய்திருக்கிறேன். அதே போல் கோமாளி படத்தின் கதையையும் எஸ்.ஜே.சூர்யாவிடம் சென்று சொன்னேன். அவர் எனக்கு பல யோசனைகளை தந்தார். அது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது” என கூறினார். இதில் இருந்து “கோமாளி” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க மறுத்துள்ளது தெரிய வந்துள்ளது.