Connect with us
sivaji_main_cine

Cinema News

நடிகர் திலகம் வீட்டை நோக்கி படையெடுக்கும் போலீஸ்?.. மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் வாரிசுகள்!..

தமிழ் சினிமாவில் ஒரு அத்தியாயம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சினிமாவை அணு அணுவாக ரசித்தவர் சினிமா தான் தன் மூச்சு என்று இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவரின் வாயிலாக தான் இன்றைய இளம் தலைமுறையினர் அக்கால அரசர்கள், சரித்திர புராண கதாபாத்திரங்களை கண்டு மகிழ்கிறோம்.

sivaji1_cine

ராம்குமார் பிரபு

பாரதியார் ஆகட்டும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆகட்டும் பல விடுதலை போராட்டக்காரர்களையும் இவரின் உருவத்தில் திரையில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். சிவாஜிக்கு என்று இந்தியா மட்டுமில்லாமல் உலக அரங்கிலும் ஒரு தனி மரியாதையே உண்டு. அது இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதையும் படிங்க : ‘துணிவு’ பட புரோமோஷனுக்கு தயாரான அஜித்!.. வைரலாகும் புகைப்படம்!..

ஆனால் அவர் பெயரை கெடுப்பதற்காகவே அவரின் வாரிசுகள் இறங்கியிருக்கின்றனர். ஏற்கெனவே சொத்து பிரிப்பதில் சிவாஜி வாரிசுகளுக்கு இடையே பிரச்சினை என்ற செய்திகள் வெளியாகியது. அது முடிவதற்குள் அடுத்த ஒரு ஷாக் ஆன தகவல் வெளியாகி இருக்கிறது.

sivaji2_cine

துஷ்யந்த் ராம்குமார்

சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார். ராம்குமாரின் மகனும் நடிகருமான துஷ்யந்த் ராம்குமார் தான் ஒரு மோசடி வழக்கில் சிக்கி அவர் மீதும் அவரது மனைவியான அபிராமி மீதும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. துஷ்யந்த் ஏற்கெனவே சக்சஸ், மச்சி என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவில் போகாததால் நடிப்பதை தவிர்த்து படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கினார்.

மீன் குழம்பும் மண்பானையும், ஜெகஜால கில்லாடி போன்ற படங்கள் துஷ்யந்த் தயாரித்த படங்களாகும். இந்த நிலையில் துஷ்யந்தும் அவரது மனைவி அபிராமியும் ஏதோ ஒரு நிறுவனத்தை வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றனராம். அந்த நிறுவனத்தோடு மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் வர்த்தக் ரீதியாக தொடர்பு வைத்திருக்கிறாராம்.

sivaji3_cine

ராம்குமார், துஷ்யந்த்

துஷ்யந்த் தனபாக்கியத்திற்கு வர்த்தக ரீதியாக 17 கோடி பணத்தை தர வேண்டியிருந்ததால் இரண்டு செக்குகளாக தனபாக்கியத்திடம் கொடுத்திருக்கிறார் துஷ்யந்த். ஆனால் அந்த இரண்டு செக்குகளும் வங்கியில் துஷ்யந்த் கணக்கில் போதிய பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டதாம்.

இதையும் படிங்க : “சூப்பர் கதை.. படம் ஹிட்”… ஸ்ரீதர் படத்துக்கு தப்பு கணக்கு போட்ட பஞ்சு அருணாச்சலம்… இப்படி ஆகிடுச்சே…

இதை வேண்டுமென்றே தான் செய்திருக்கிறார் என தனபாக்கியம் துஷ்யந்த் மீதும் அவரது மனைவி அபிராமி மீதும் வழக்கு தொடர்ந்தார். மேலும் பணத்திற்கு நான் பொறுப்பு என ராம்குமாரும் சொன்னதால் அவர் மீதும் போலீஸ் திரும்பியது. இதை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அவர்களுக்கு வெளியில் ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது.

sivaji4_cine

ராம்குமார்

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிடிவாரண்டை திரும்பி வாங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கு பிப்ரவரி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top