தெலுங்கு இயக்குனர்களாக தேடி பிடித்து நடிக்கும் தனுஷ்… எல்லாத்துக்கும் காரணம் அந்த டான்சர் நடிகைதானாம்!!

Published on: November 29, 2022
Vaathi
---Advertisement---

தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமா உலகிலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் தனுஷ். தமிழில் “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார்.

Dhanush
Dhanush

டாப் நடிகர்

“காதல் கொண்டேன்” திரைப்படத்தை தொடர்ந்து “திருடா திருடி” என்ற திரைப்படத்தில் நடித்தார் தனுஷ். இத்திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜனரஞ்சக ரசிகர்களின் நாயகனாக தனுஷ் மாறிப்போனார்.

Dhanush
Dhanush

இத்திரைப்படத்தை தொடர்ந்து “புதுக்கோட்டையில் இருந்து சரவணன்”, “சுள்ளான்” போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்த தனுஷ், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்தார்.

பாலிவுட்டில் தனுஷ்

தமிழின் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்து வந்த தனுஷ், “ராஞ்சனா” என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.  இத்திரைப்படத்தை தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து “ஷமிதாப்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவ்வாறு தனுஷ் பாலிவுட்டிலும் கவனிக்கப்பட, இந்தியாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

Shamitabh
Shamitabh

ஹாலிவுட்டில் தனுஷ்

கடந்த 2018 ஆம் ஆண்டு “தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடித்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் வெளிவந்த “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் தனுஷ் நடித்திருந்தார். இவ்வாறு ஒரு உலக நடிகராக தனுஷ் மாறிபோனார்.

The Gray Man
The Gray Man

வாத்தி

தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் “வாத்தி”. இத்திரைப்படம் தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் வெளிவருகிறது.

இதையும் படிங்க: “கிளாமர் நடிகையை கூப்பிட்டு வந்தது தப்பா போச்சே”… திருப்தியே இல்லாமல் புலம்பும் இயக்குனர் பா.ரஞ்சித்…

Vaathi
Vaathi

“வாத்தி” திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் “தொலி பிரேமா”, “மிஸ்டர் மஜ்னு”, “ரங் தே” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வா வாத்தி” என்ற பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து தெலுங்கு இயக்குனர்கள்

தனுஷ் “வாத்தி” திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் ஷேகர் கம்முலா இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். அதே போல் மற்றொரு தெலுங்கு இயக்குனருடனும் நடிக்க உள்ளாராம் தனுஷ். அதாவது சாய் பல்லவி நடித்த “விராட பர்வம்” திரைப்படத்தின் இயக்குனரான வேணு உடுகுலா திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம்.

Sai Pallavi
Sai Pallavi

இவ்வாறு தனுஷ் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர்களுடன் கைக்கோர்ப்பதற்கு சாய் பல்லவிதான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது சாய் பல்லவியின் மூலமாகத்தான் தெலுங்கு இயக்குனர்கள் தனுஷை வைத்து இயக்க படை எடுக்கிறார்களாம். சாய் பல்லவிதான்  இந்த இயக்குனர்களை எல்லாம் பரிந்துரை செய்கிறாராம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.