சிங்களத்தமிழ், கொங்கு தமிழ் பேசி அசத்திய கமல் எந்தப்படத்தில் முத்திரை பதித்தார்? மருந்தாக அமைந்தது எது?

Published on: November 30, 2022
---Advertisement---

கமல் பெரும் முயற்சி செய்து பிரம்மாண்டமாக எடுத்த படம் ஹேராம் பரபரப்பாக பேசப்பட்டதே தவிர கமலுக்கு அந்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை.

படத்தின் தோல்வியை அடுத்து என்ன செய்வது என்று யோசித்த வேளையில் அவ்வை சண்முகி படம் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவானது. படம் நகைச்சுவையுடன் பட்டையைக் கிளப்பியது.

Heyram

படத்தில் அவ்வை சண்முகி என்ற மாமி வேடத்தில் கமல் நடித்து அனைவரையும் அசர வைத்தார். அதன் பிறகு தான் பார்த்த ஒரு படத்தைப் போல தமிழில் ஒரு கதை அமைத்து அதற்கு வேறு திரைக்கதை, பிளாஷ்பேக், கேரக்டர்கள் என்று ஒரு படம் பண்ணலாம் என்ற பேச்சு எழுந்தது. அது தான் தெனாலி.

இந்த உத்வேகத்தைத் தந்த படம் எது தெரியுமா? ஆங்கிலத்தில் வெளியான வாட் அபவுட் பாப் என்ற படம் தான். ஆனால் அதை விட சூப்பராக வந்தது தெனாலி. வெவ்வேறு கதை அம்சங்களைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்ந்தது தெனாலி.

இந்தப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் ரூ.7 கோடி. தனது வங்கிக்கணக்கு அப்போது தான் 0வில் இருந்து மீண்டதென தெரிவித்து இருந்தார். இந்தப்படத்திற்காக இலங்கைத் தமிழை பி.எச்.அப்துல் ஹமீதிடம் இருந்து கற்றுக் கொண்டார். அற்புதமாகப் பேசி அசத்தினார். எலியுடன் பழகும் விதம், கிரேஸிமோகனுடன் சேர்ந்து அற்புதமான நகைச்சுவை என படம் பட்டையைக் கிளப்பியது.

ஜெயராம் டாக்டராக வந்து கமல் எதற்கும் பயப்படும் மனநோயாளி கேரக்டரில் வருகிறார். ஜெயராம் டாக்டராக வந்து கடைசியில் அவரைக் குணப்படுத்தப் போய் ஒரு கட்டத்தில் அவரே பித்துப் பிடித்தவர் போலாகி விட படம் நம்மை உற்சாகத்துடன் ரசிக்க வைக்கிறது. ஜோதிகா, தேவயாணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Thenali3

கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் 2000ல் வெளியான இந்தப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து படு ஸ்பீடாகப் போகும்.

இந்தப்படம் தோல்வியில் துவண்டு கொண்டு இருந்த கலைஞனுக்கு மருந்து போட்டது.

ஒருமுறை பாலுமகேந்திரா தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்தார். பணம் கடனாக வாங்க கமலிடம் சென்றார். இருவரும் வழக்கம்போல மணிக்கணக்கில் உலக சினிமாக்கள் முதல் உள்ளூர் சினிமாக்கள் வரை அளவளாவி பேசினர்.

இந்த பேச்சின் சுவாரசியத்தில் கமலிடம் பணம் கேட்காமல் இருந்துவிட்டார் பாலுமகேந்திரா.

Sathileelavaathi

கொஞ்ச நேரத்தில் கமல் நான் ஒரு கதையை சொல்கிறேன். உங்களுக்கு அது பிடித்து இருந்தால் இயக்கித் தர முடியுமா என்று கேட்டார். அதற்கு சரி என்று அவர் சொல்ல, கமல் அவர் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பணத்தை அட்வான்ஸாகக் கொடுத்து அனுப்பினார். அதாவது கமலுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. உதவி என்பதை விட அவர் திறமைக்கு எப்போதும் மதிப்பளிக்கக் கூடியவர்.

அதனால் தான் அவ்வளவு பெரிய தொகையை அவரால் எளிதாகக் கொடுக்க முடிந்தது. அப்படி எந்தப்படத்திற்காக அவர் கொடுத்தார் தெரியுமா? அது தான் சதிலீலாவதி. 1995ல் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியானது.

இளையராஜா இசை, அனந்து கதை, கிரேசி மோகனின் வசனம். அவருடன் ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா உள்பட பலரும் நடித்து இருந்தனர். இந்தப்படத்தில் கமலுக்கு ஜோடி கோவை சரளா. கமல் கொங்கு தமிழில் பேசி அசத்திய படம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.