”தனுஷ் எங்கள் மகன் தான்” மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்…

Published on: December 1, 2022
---Advertisement---

தனுஷை தங்கள் மகன் தான் எனக் கூறி மேலூர் தம்பதி தொடரப்பட்ட வழக்கில் அடுத்த கட்டமாக வழங்கப்பட்டுள்ள உத்தரவு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பின்னணிப் பாடகராக இருந்து வருகிறார். தனுஷ் அவரது கேரியரில் இதுவரை 46 படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ்
தனுஷ்

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தான் நடிகர் தனுஷ். ஆனால் இவரை தங்கள் மகன் எனக்கூறி மேலூர் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டு வரும் நிலையில், 2017ல் தனுஷ் தாக்கல் செய்ததில் போலி ஆவணங்கள் இருந்ததாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: தனுஷுன்னே நினைச்சிட்டோம்!.. தனுஷ் மகன் இவ்ளோ பெருசா வளந்துட்டாரா?…

இதை தொடர்ந்து அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கக்கோரி கதிரேசன் மதுரை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தனுஷ்

இதை தொடர்ந்து, தனுஷின் பிறப்புச் சான்றிதழை சரிபார்க்க கோரி மதுரை மாநகராட்சிக்கு நீதிமன்றம் ஆவணத்தை அனுப்பி இருக்கிறது. இந்நிலையில், கதிரேசன் தரப்பில் இருந்து அந்த ஆவணங்களை முறையாக சரிபார்க்கும்படி மனு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. வழக்கு குறித்த ஆவணங்களை நடுவர் மன்றம் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.