Connect with us

Cinema News

பாபா திரைப்படம் மொக்கை ப்ளாப்… வாய் கொழுப்பால் உருவான பிரச்னை… சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்த தருணம்…

ரஜினியின் பாபா திரைப்படத்தின் தோல்வியில் ரஜினி செய்த மிகப்பெரிய விஷயம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினி நடிப்பில் மெகா ஹிட் படங்களில் முக்கியமானது படையப்பா. வில்லி கூட இவ்வளவு கெத்த நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம். அந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தினை முடித்த ரஜினி அடுத்த படம் குறித்த எந்த முடிவும் எடுக்காமலேயே இருந்து இருக்கிறார்.

பாபா

Baba

பிரபல தயாரிப்பாளர்கள் எங்களுக்கு படம் பண்ணி தர வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு தர துவங்கினார். ஒரு கட்டத்தில் சொந்த பேனரிலேயே இந்த படத்தினை எடுக்கலாம் என முடிவு செய்த ரஜினி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியின் இமயமலை பயணத்தினை மையமாக வைத்து ஒரு மாயஜால படமாக உருவாகி இருந்தது.

இதையும் படிங்க: 24 மணி நேரம் ஆனாலும் விஜயகாந்த் இதை விடமாட்டார்… பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்…

ரஜினியின் தயாரிப்பு என்பதால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலீஸாகி முதல் ஷோவிலேயே படம் மிகப்பெரிய தோல்வி படம் என ரசிகர்கள் கொக்கரித்தனர். இதற்கு காரணம், கர்நாடகா பிரச்னையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சந்தனக்கடத்தல் வீரப்பனை மோசமாக விமர்சித்திருந்தார். அதன் தாக்கத்தால் படத்தின் வசூல் அதளபாதாளத்திற்கு சென்றது.

Rajini

இதனால் மனமுடைந்த ரஜினிகாந்த் உடனே வெளிநாட்டு கிளம்பி சென்றார். தமிழ்நாட்டிலோ ஒவ்வொரு நாள் ஷோவினை ஓட்டவே தியேட்டர் ஓனர்கள் படாதப்பாடு பட்டனர். இதனால் ரஜினி அலுவலகத்தில் சென்று இந்த பிரச்னை குறித்து தொடர்ந்து முறையிட்டனர்.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இப்போ என்ன உங்க எல்லாரிடமும் வாங்கிய பணம் அப்படியே தான் இருக்கும் எனக் கூறி விற்ற காசை அப்படியே 10 விநியோகிஸ்தர்களுக்கும், 110 தியேட்டர்காரர்களுக்கு திருப்பி கொடுத்தார். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் பாபா படம் செய்த வசூல் 20 கோடி ரூபாயிற்கும் அதிகமாம். மற்ற நடிகர்கள் இதே வசூலை செய்யும் போது மாஸ் ஹிட் என விளம்பரம் செய்யும் போது இதை ஏன் ஃப்ளாப் என்கிறார்கள் என ஒரு விநியோகிஸ்தர் ஒரு கூட்டத்தில் சொல்லி சென்றார் என சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top