தமிழ் சினிமாவில் 90களில் பயங்கர சார்மிங் பாயாக சாக்லேட் பாயாக சுற்றி வந்தவர் நடிகரும் நவரச நாயகனுமான நடிகர் கார்த்திக். துள்ளல் நாயகனாக தன்னையும் சந்தோஷமாக மற்றவர்களையும் கலகலப்பாக வைத்திருக்கக் கூடிய திறமை பெற்றவர் கார்த்திக்.
சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக்கின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தேறியது. நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

எப்பேற்பட்ட நடிகர் கார்த்திக்? அவருடைய மகன் திருமணம் இப்படி எளிய முறையில் நடந்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேவராட்டம் படத்தில் நடித்ததன் மூலம் கௌதம கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் நெருங்கிய நண்பர்களானார்கள். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதையும் படிங்க : ‘ஆறிலிருந்து அறுபது வரை’ மெகா ஹிட் படத்தின் கதை இந்த இயக்குனரின் வாழ்க்கை கதையா?.. காலம் கடந்து வெளிவந்த உண்மை!..

பின் தங்கள் காதலை வெளிப்படுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் முறையாக திருமண தேதியை அறிவித்தனர். இப்படி எளிய முறையில் எல்லாவற்றையும் நடத்திய கௌதம் கார்த்திக் திருமண அழைப்பிதழையும் எளிமையாக தான் தயார் செய்திருக்கிறார்.
பிரிண்ட் அடித்ததே 250 பத்திரிக்கைகள் தானாம். அதில் ஒரே ஒரு பத்திரிக்கையை மட்டும் தனது அப்பாவிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிய கார்த்திக் என்னடா இது ஒரே ஒரு பத்திரிக்கை? எனக்கு நெருக்கமானவர்கள் அத்தனை பேருக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு கௌதம் நோ டேடி.. அடிச்சதே 250 பத்திரிக்கை தான் என்று கூற இதன் மூலம் கார்த்திக் பயங்கர அப்செட் ஆகிவிட்டாராம்.

