
Cinema News
இந்த காரணத்தால் தான் நயனால் பையா படத்தில் நடிக்க முடியவில்லை… சீக்ரெட்டை உடைத்த லிங்குசாமி
Published on
By
கார்த்தியின் கேரியரில் மாஸ் ஹிட்டான பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். ஆனால் அவர் நடிக்க முடியாமல் போனது என்ற சுவாரஸ்ய தகவலை இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருக்கிறார்.
2010ம் ஆண்டு லிங்குசாமி என். லிங்குசாமி எழுதி, தயாரித்து இயக்கி வெளியான திரைப்படம் பையா. இந்த படத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து செம ஹிட் அடித்தது. திருப்பதி பிரதர்ஸின் N. சுபாஷ் சந்திர போஸ் தயாரித்து, தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது இப்படம்.
Paiya
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 2008ல் தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்தது. பையா 2 ஏப்ரல் 2010 அன்று வெளியிடப்பட்டு பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது செம வசூலை குவித்தது.
இதையும் படிங்க: டைட்டிலில் ரஜினிக்கு போட்ட தெறிமாஸ் பிஜிஎம்..எங்கிருந்து புடிச்சோம் தெரியுமா?… சீக்ரெட் சொல்லும் தேவா..
முதலில் இந்த படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை நயன்தாரா தான். ஜூலை 2008ல், பையா படத்தில் கதாநாயகியாக நடிக்க ₹1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கும் பையா கதை ரொம்பவே பிடித்து இருந்ததாம். ஆனால் சில பிரச்னைகளால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க திட்டமிடப்பட்டது. நயன்தாராவுடன் அவரது சம்பளத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
Nayanthara
பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், நயன்தாரா படத்தில் இருந்து விலகினார். அவருக்கு அடுத்ததாக தான் தமன்னா நாயகியாக ₹80 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...