படம் எடுத்தேன் எல்லாம் போச்சு… சொத்தை இழந்து நிற்கதியாக நிற்கும் கஞ்சா கருப்பு

Published on: December 5, 2022
---Advertisement---

படம் எடுத்ததால் கஞ்சா கருப்பு மொத்த சொத்தையும் இழந்து வாடகை வீட்டில் இருப்பதாக தெரிவித்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ganja karuppu

2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் படத்தில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அந்த படத்தினை தொடர்ந்தே தன்னுடைய பெயரை கஞ்சா கருப்பாக மாற்றிக்கொண்டார். சசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் தான் அவரின் கேரியர் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இவருக்கும் சினிமா உலகில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது.

கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவின் நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து நடிகராக பிஸியாக இருந்து வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜென்டில்மேன் படம் அப்பட்டமான காப்பி… அதுவும் இவர் படத்தின் கதையா? ஷாக் தகவல்
ganja karuppu

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது, நான் படம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான போது என் நண்பர்கள் இது வேண்டாம் என்றார்கள். ஆனால் அதையே செய்தேன். பாதி படம் முடிந்தப் பின்னர் தான் எனக்கு அது புரிந்தது. கையில் இருந்த மொத்த காசும் போனது. என்னுடைய உழைப்பில் சினிமாவிற்கு வந்து சம்பாரித்து கட்டிய வீட்டினை விற்று விட்டேன். தற்போது 20000 ரூபாயிற்கு வாடகைக்கு இருந்து வருகிறேன் என்றார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.