Cinema History
‘ஜாலியோ ஜிம்கானா’ விஜய் பாட்டுனு தான் எல்லாருக்கும் தெரியும்!.. அடிக்கல் போட்ட பழம்பெரும் பிரபலம் யாருனு தெரியுமா?..
விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்த படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதையில் கோட்டை விட்ட நெல்சன் பாடலில் ஹிட் கொடுத்து தெறிக்க விட்டிருந்தார் அனிருத்.
அதிலும் குறிப்பாக அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் இன்று வரை சிறியவர்கள் முதல் பெருசுகள் வரை வாயில் முனுமுனுத்துக் கொண்டே இருக்கும் பாடலாக மாறிவிட்டது. அதிலும் ஜாலியோ ஜிம்கானா பாடல் குழந்தைகள் மிகவும் ரசிக்கக்கூடிய பாடலாகவே மாறிவிட்டது.
ஆனால் இந்த ஜாலியோ ஜிம்கானா என்ற வார்த்தைக்கு பின்னால் பெரிய கதையே இருக்கிறது என்று சமீபத்தில் வெளிவந்த ஒரு தகவல் மூலம் அறியலாம். பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீதர் தன் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த படம் ‘அமரதீபம்’ என்ற திரைப்படம்.
இந்த திரைப்படத்திற்கு டி.சலபதிராவ் என்ற இசையமைப்பாளரை இசையமைக்க திட்டமிட்டிருந்தார். சலபதிராவ் அந்த காலத்தில் இசையில் மிகவும் தேர்ந்தவர். குறிப்பாக கிராமிய தெலுங்கு இசையில் வல்லவர். மேலும் பிரபலங்கள் விரும்பும் வண்ணம் உடனுக்குடனே ட்யூனை மாற்றி மாற்றி வாசிக்கக் கூடியதில் வல்லவர்.
அமரதீபம் படத்திற்காக சலபதிராவை ட்யூன் அமைக்கச் சொல்லி ஸ்ரீதர் கேட்க அவரும் ஸ்ரீதர் விருப்பப்படி ட்யூன் போட்டு காண்பித்தார். உடனே ஸ்ரீதருக்கு அது மிகவும் பிடித்துப் போக பாடலாசிரியர் இராமையாதாஸிடம் வரிகளை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு இராமையா ‘ நம்புனா நம்புங்க நம்பாட்டா போங்க’ என்ற வரிகளை சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : கடுப்பாகி மறைமுகமா திட்டிய சூர்யா…கண்டும் காணாமல் இருந்த பாலா.. பணம் போட்டவராச்சே!…
இதை கேட்டதும் ஸ்ரீதர் ஐய்யயோ இது தான் என் முதல் படம். முதல் படத்திலேயே இப்படி அபச குணமாக சொல்லுறீங்களே? ஏதாவது ஜாலியா சொல்லுங்க என்று கேட்டதும் இராமையாதாஸ் அந்த ஜாலியா என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு ‘ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா’என்ற வரிகளை சொல்ல ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அந்த வரிகளில் அமைந்த அமரதீபம் பட பாடல் வெளியாகி எல்லார் வீட்டிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலாகவே மாறியது. அந்த பாடலில் நடிகை பத்மினியின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது. மேலும் அமரதீபம் படம் சிவாஜி கணேசன் பத்மினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக விளங்கியது.