மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் எந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது என்பதை நாம் அறிந்திருப்போம். இலக்கியங்களில் மிகப்பெரும் பழமை வாய்ந்த நாவலான பொன்னியின் செல்வன் நாவலை

ஜெயமோகன் வசனத்தில் மணிரத்னம் அழகாக சித்தரித்திருந்தார். கிட்டத்தட்ட 30 வருட கனவாக இருந்த இந்த படைப்பை மணிரத்னம் நனவாக்கினார். ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட அனைவரும் நடித்திருந்த இந்த படம் ஐந்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஒரு செய்தி இன்று இணையத்தில் வைரலானது. அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அதே பிலிம்ஸ் ஸ்டூடியோவில் விஜயின் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிந்தது. அந்த சமயம் வெங்கட் பிரபு விஜய்க்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர் என்பதால் அஜித்தின் அனுமதியுடன் விஜயை மங்காத்தா படப்பிடிப்பு தளத்தில் வரவழைத்தார்.

அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வெங்கட் பிரபு உங்கள் இருவரையும் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுகிறேன் என்று கூற அதற்கு அவர்கள் இருவரும் சம்மதித்திருக்கிறார்கள். இதை அறிந்த வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறாயா ? என்று வெங்கட் பிரபுவிடம் கேட்க
இதையும் படிங்க : எல்லாமே வதந்தி!..தளபதி 67 ரியல் கதை இதுதானாம்!..அட இது மாஸ் கதையாச்சே!…
அவர் இல்லை என சொன்னதும் முதலில் படி அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜயையும் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் அஜித்தையும் நடிக்க வைத்தால் அற்புதமாக இருக்கும் என்று கூறினாராம். ஆனால் இதுவரைக்கும் வெங்கட் பிரபு அந்த நாவலை படிக்க வில்லை என்பது தான் உண்மை. ஒரு வேளை படித்திருந்தால் அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பார் என்று இந்த தகவலை கூறிய பிரபல பத்திரிக்கையாளரும் வலைப்பேச்சு புகழ் அந்தனன் தெரிவித்தார்.

