அமெரிக்காவை அதிர வைத்த பேட்ட ‘மரண மாஸ்’ – வைரலாகும் வீடியோ

Published on: February 13, 2020
---Advertisement---

ffd3c57941c17d7f79394861bfefadda-1-2

அமெரிக்ககாவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘America's got talent' என்கிற நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து நடன கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். நடனமாடுவது, பாடுவது, மாய ஜால தந்திரங்கள் செய்வது என ரசிகர்களுக்கு வியப்பை கொடுக்கும் திறமைசாலிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையே கவுரவமாகவே பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த ‘We unbeatable' என்கிற நடனக்குழு ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மரண மாஸ்’ பாடலுக்கு வெகு சிறப்பாக நடனமாடி அசத்தினர்.  அவர்களின் திறமையை கண்டு போட்டி நடுவர்கள் மலைத்து போயினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment