Cinema News
யாரும் எம்ஜிஆராக முடியாது!.. விஜய்க்கு எச்சரிக்கை விடும் பிரபல பத்திரிக்கையாளர்!..
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசிய பிரபல பத்திரிக்கையாளர் மணி விஜய்க்கு தனது அறிவுரைகளையும் சேர்த்து கூறியுள்ளார். அதாவது உதய நிதியின் தலையீடு காரணமாக வாரிசு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியது.
ஏனெனில் 2005 லிருந்து 2009 வரை திமுக ஓங்கி இருந்த காலத்தில் கலாநிதி மாறனிடம் தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் அடங்கி இருந்தது. அது பல பேருக்கு தெரிந்த விஷயம் சொல்லப்போனால் மிரட்டி கூட படங்களை வாங்கி ரிலீஸ் செய்து கொண்டிருந்தனர்.
இந்த ஆட்சியில் அதே குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதியிடம் தான் எல்லா படங்களும் சென்றடைகின்றன. ஆனால் இது நாள் வரைக்கும் உதயநிதியை பற்றி எந்த ஒரு புகாரும் சினிமா பிரபலங்கள் மத்தியில் எழவில்லை. மேலும் அந்த பணியை அவர் சிறப்பாக இதுவரைக்கும் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றார்.
ஆனால் உதய நிதியால் தான் விஜயின் வாரிசு பட ரிலீஸ் சிக்கல் என சொல்வது என்பது பற்றி எனக்கு தெரியாது. அதே நேரம் கிட்டத்தட்ட 10 வருடங்களாக விஜய் வாய் மொழியாக இல்லாமல் உடல் மொழியாக தன்னுடைய படங்களின் மூலம் அரசியல் பேசிவருகிறார். ரஜினி என்ன செய்தாரோ அதையே தான் இப்பொழுது விஜயும் செய்து வருகிறார்.
இதையும் படிங்க : நாங்கலாம் வேற மாதிரி!.. தளபதி-67 பூஜை புகைப்படங்களை வெளியிடாததற்கு இது தான் காரணமா?..
அவர் அரசியல் பேசுவதால் தான் இரு கட்சிகளும் அவரை ஒரு பொருட்டாக கருதி தொடர்ந்து அவருடைய படங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். ஏன் அவர் சக நடிகரான அஜித்திற்கு ஏன் அந்த பிரச்சினை வருவதில்லை?ஏனெனில் சினிமாவை சினிமாவாக மட்டுமே அஜித் பார்க்கிறார். ஆனால் விஜய் அப்படி இல்லை. சினிமாவை ஒரு ஆயுதமாக எண்ணி அரசியல் அம்பு விட்டுக் கொண்டு இருக்கிறார்.
இதனால் அவருக்கு குடைச்சல் கொடுப்பது சரி என்று நான் பேசவில்லை. விஜய்க்கு அரசியல் எண்ணம் இருந்தால் 120 கோடி ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கு விஜய் அவருக்கு வரும் பிரச்சினையையும் சமாளித்து தான் ஆக வேண்டும். ரஜினி இதோ வருகிறேன் வருகிறேன் என்று ரசிகர்களுக்கு ஆப்பு தான் வைத்தார் கடைசியில்.
இப்பொழுது விஜயும் அதே தான் செய்து வருகிறார். ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இப்ப உள்ள நடிகர்கள் அனைவரும் தன்னை ஒரு எம்ஜிஆராக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே எம்ஜிஆர் ஒரு நடிகராக இருந்து அரசியலுக்கு வரவில்லை. அடிப்படையில் அவர் திமுக தொண்டராக இருந்து அதன் பின் நடிகராக மாறி மக்கள் மனதை கொள்ளை கொண்டு 1975 ஆம் ஆண்டு வாக்கில் தான் கட்சியை கைபிடித்தார்.
அதை மனதில் வைத்து தான் விஜய், ரஜினி, போன்ற அரசியல் எண்ணம் உள்ள நடிகர்கள் தங்களை எம்ஜிஆராக பாவித்துக் கொண்டு சுற்றி வருகிறார்கள் என்றும் இனிமேல் ஒரு நடிகன் தமிழ் நாட்டை ஆளுவது என்பது முடியாது என்றும் சத்தியம் செய்து கூறினார் பத்திரிக்கையாளர் மணி.