என்ன செய்றதுன்னே தெரியல… கண்ணீர் விட்ட வடிவேலு பட காமெடி நடிகை

Published on: December 11, 2022
---Advertisement---

வைகைப்புயல் வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோருடன் காமெடி வேடங்களில் நடித்த காமெடி நடிகையான பிரேம பிரியா என்ன செய்றதுன்னே தெரியலை என வறுமையினால் கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேம பிரியா

சிம்பு நடித்து 2006-ல் வெளியான படம் தொட்டி ஜெயா. இந்தப் படம் மூலம் வில்லியாக அறிமுகமானவர் பிரேம பிரியா. அதன்பிறகு வடிவேலுவுடன் ஏபிசிடி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அத்தோடு, பம்பரக் கண்ணாலே, ராஜா ராணி என பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அதில், அவர் சொல்லியிருக்கும் தகவல்கள் அனைத்தும் சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

priya

அவர் கூறுகையில், என்னைப் போன்றவர்களுக்கு தினசரி நடிக்க வாய்ப்புக் கிடைக்காது. ஒருநாளைக்கு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுப்பார்கள். ஒரு மாதத்தில் இரண்டு மூன்று நாளைக்குத்தான் வாய்ப்பு இருக்கும். மற்ற நாட்களில் வாய்ப்புக் கிடைக்காது. ஏழு மாதங்களுக்கு முன்பு எனது கணவர் சர்க்கரை வியாதியால் உயிரிழந்து விட்டார். சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அதைப்பற்றி விசாரிக்கக் கூட இல்லை. கணவர் இறந்தபிறகு சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படும் நிலையில் இருக்கிறேன்.

prema priya

இதையும் படிங்க: மர்மம் உடைந்த சித்ரா தற்கொலை வழக்கு… பரபரப்பு தேடுகிறாரா விஜே சரண்யா?..வெளியான அதிர்ச்சி..

சுறா படத்தில் வடிவேலுவுடன் நடிக்க இருந்தேன். ஆனால், அவர் வேறு ஒருவரை நடிக்க வைத்துவிட்டார். வடிவேலுவுடன் சண்டை போட்டிருக்கிறேன். ஏவிஎம் ஸ்டூடியோவில் பலர் முன்னிலையில் வடிவேலுவுடன் சண்டை போட்டேன். அதன்பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. என்ன செய்றதுன்னே தெரியலை. வாழ்றதா… சாகுறதான்னு கூட தெரியலை. கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் பிரேம பிரியா.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.