Connect with us

Cinema News

யுவன் சங்கர் ராஜாவை சந்திக்காமலே அவர் படத்தில் பாடல் எழுதிய கவிஞர்.. சுவாரஸ்ய பின்னணி

தமிழ் சினிமாவில் கவிஞர்களிலேயே வித்தியாசமானவர் கவி்ஞர் வாலி. மிகவும் குறும்புத்தனமாக பதிலளிப்பதில் வல்லவர். கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்கு பல முக்கியமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியதால் அவருக்கு சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. பின்னர் சிவாஜி படத்தில் பாடல் எழுத தொடங்கினார் வாலி.

Vaali

வாலிக்கு எப்போதுமே இன்றைய கால இசையமைப்பாளர்கள் மீது பெரிய கோபம் இருந்திருக்கிறது. 50ஸ்களில் இசையமைப்பு பணிகளில் கவிஞர்கள் இல்லாமல் நடக்கவே நடக்காது. சிலர் அங்கையே வரி எழுதி உடனே ட்யூன் போட்டு பாட்டே முடித்து விடுவார்களாம். அதனால் எப்போதுமே கவிஞர் உடன் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த கால இசையமைப்பாளர்கள் பெரிதாக் இரவில் தான் இசையமைப்பு செய்கிறார்கள். இதனால் வாலியால் இரவு நேர இசையமைப்பு பணிகளில் கலந்து கொள்ளவே முடியாதாம். கேட்கப்படும் பாடல்களை எழுதி கொடுப்பதுடன் முடித்து கொள்வாராம். அப்படி அவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பார்த்தே பத்து வருடங்கள் ஆகி விட்டதாம். ஆனால் தொடர்ந்து அவர் படங்களில் பாடல் எழுதியதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: நாம வளர்த்துவிட்ட பையன்!.. ஹீரோக்களின் இமேஜ் புரியாமல் தப்பு பண்ணும் இயக்குனர்கள்…

Continue Reading

More in Cinema News

To Top