விமானத்தில் வெளியான சூரரை போற்று ‘வெய்யோன் சில்லி’ பாடல் வரிகள் வீடியோ…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தில் இடம் பெற்றுள்ள ‘வெய்யோன் சில்லி’ என்கிற பாடலின் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கி சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வெய்யோ சில்லி’ பாடலின் வரிகள் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இது தொடர்பான விழா சென்னை விமான நிலையத்தில் ஒரு விமானத்தின் உள்ளே நடைபெற்றது. பறந்து கொண்டே இப்பாடல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
