
இறுதிச்சுற்று படத்தை இயக்கி சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்ற ‘வெய்யோ சில்லி’ பாடல் ஆடியோ மற்றும் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதுவரை இல்லாத மாதிரி புதுமாதிரியாக இப்பாடல் வெளியீட்டு விழா அந்தரத்தில் விமானத்தில் வெளியிடப்படது. இது தொடர்பான வீடியோவை இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சூர்யா, விவேக் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.
Heres a special video for you all !! #NedumaaranRajangam on board !!#VeyyonSilliLaunchMidAir #VeyyonSilli @Suriya_offl @gvprakash @rajsekarpandian pic.twitter.com/OkL0rZv6Sz
— Vivek Lyricist (@Lyricist_Vivek) February 13, 2020