டிவிட்டரில் ஆர் சி பி செய்த செயல்! கோலி, டிவில்லியர்ஸ் அதிர்ச்சி !

e4ab3e400660e1df7f8bf672aa2817ba

ஐபிஎல்-ன் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிய பெயரோடு களமிறங்கும் என சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஆனால் ஒரு முறைக் கூட கோப்பையை வெல்லாத அணி என்றால் அது ஆர் சி பி தான். இத்தனைக்கும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனான கோலி சமீப் ஆண்டுகளில் அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென கோலி படை துடிக்க அணி நிர்வாகமோ ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் தங்கள் அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றியுள்ளது. மேலும் தங்கள் புகைப்படத்தையும் நீக்கியுள்ளது. இதைப்பார்த்த அணி வீரர்களான கோலி, சஹால் மற்றும் டிவில்லியர்ஸ் நம் அணிக்கு என்ன ஆச்சு? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்பான்சராக முத்தூட் பின்கார்ப் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் புதிய பெயர் சூட்டப்படலாம் எனவும் புதிய சீருடை வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Categories Uncategorized

Leave a Comment