
Cinema News
கமல், ரஜினி சாருக்கே….இந்த நிலைமைன்னா….நம்மள்லாம் தாக்குப்பிடிப்போமான்னு…பயமா இருந்துச்சு..!
Published on
தமிழ்சினிமாவில் ஒரு வெகுளியான யதார்த்தமான காமெடி நடிகர் சத்யன். இவர் மாதம்பட்டி சிவகுமாரின் மகன். சத்யராஜ் இவருக்கு மாமா. சிபிராஜ் மைத்துனர். தமிழ்த்திரை உலகில் இளையவன் என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.
Nanban
2012ல் இயக்குனர் ஷங்கரின் நண்பன் படத்தில் இவரது நடிப்பு பெசப்பட்டது. அடுத்து 2013ல் ஒன்பதுல குரு, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி என 3 சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். நண்பன் படம் வந்த புதிதில் பேட்டி ஒன்றில் தனது கருத்துகளை இவ்வாறு பகிர்கிறார்.
இந்தப்படத்தில் ஷங்கர் சார் எனக்கு மெயின் ரோல் கொடுத்து இருக்கிறார். அதற்கு நன்றி. இந்தப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கு. பெரிய ஹீரோக்களுக்கே அவரது படத்தில் நடிப்பது கனவா இருக்கும்.
Sathyaraj
எனக்கு அது நனவாகி இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பொதுவா அவரோட சாதனையை அவரே முறியடிப்பாரு. முந்தையப் படங்களை ஒப்பிடும்போது இந்தப்படமும் அப்படி அமைஞ்சிருக்கு.
ஷங்கர் சார் ஒர்க்ல ரொம்ப பர்பெக்ஷனா இருப்பாரு. எந்திரன் ஆடியோ லாஞ்ச்ல ரஜினி சாரே இப்படி சொல்லிருக்காரு. சிவாஜி பட சூட்டிங்கின் போது ஒருமுறை ரஜினி சாரு கமல்சாரிடம் பேசிருக்காரு. ஷங்கர் சாரைப் பத்திக் கேட்டேன்.
அப்போ கமல் சார் சொன்னாரு. ரொம்ப டஃப்பான குதிரைங்க. ஜர்னி வந்து கொஞ்சம் டஃப்பாக இருக்கும். கரெக்டா உங்க டெசிகினேஷனுக்குக் கொண்டு போயி உங்களை சேர்த்துரும். அதாவது நீங்க அடைய வேண்டிய இலக்கைப் போய் அடைஞ்சுருவீங்க.
Director Shankar
அதுல வந்து அந்தக் குதிரை தப்புப் பண்ணாது. ஆனா அந்த டிராவல் வந்து ரொம்ப ஹார்டா இருக்கும்…ரொம்ப பர்பெக்ஷன் பார்ப்பாரு ரஜினின்னு சொன்னாரு. அப்ப நாங்க யோசிச்சோம். கமல் சார், ரஜினி சாருக்கே இப்படின்னா…நாங்கள்லாம் எப்படி அந்தக் குதிரைல போவோம்…னு…அதுவும் எனக்கெல்லாம் எப்படி இருக்குமோன்னு ஒரு பயம். ஆனா பார்த்தீங்கன்னா அவரு மாதிரி பியூட்டிபுல் பர்சன பார்க்கவே முடியாது.
இவ்வளவு பெரிய உயரத்துக்குப் போனாலும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாம சிம்பிளா பழகுவாரு. நானே சொந்தமா நிறைய டயலாக் பேசுனேன்.
அதெல்லாம் ஏத்துக்கிட்டாரு. சத்யராஜ் சார், எஸ்.ஜே.சூர்யா சார் எல்லாருமே பிரண்ட்லியா இருந்தாங்க. உண்மையிலேயே இது நண்பன் இல்ல. நண்பர்கள்னு தான் சொல்லணும். ஏன்னா எல்லாருமே கேரவனுக்கு யாருமே போக மாட்டோம்.
அந்தக் காலத்துல சொல்வாங்க. சிவாஜி, எம்ஜிஆர் காலத்துல ஷாட் முடிஞ்சு பேசிக்கிட்டு இருப்பாங்க. அப்போ கேரவன்லாம் கிடையாது. அதை இந்த நண்பன் செட்ல பார்த்தோம். ஷங்கர் சார் எங்களோட குழந்தை மாதிரி பேசிக்கிட்டு இருப்பாரு. அதனால் தான் இந்தப்படம் இவ்ளோ மாஸ் ஹிட்டானது.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...