Cinema News
“பணம் வேணும் இல்லைன்னா விஷத்தை குடிச்சிடுவேன்”… தயாரிப்பாளர் செய்த அட்ராசிட்டீஸ்… இறங்கி ஆடும் பயில்வான்…
“பிரம்மச்சாரிகள்”, “டபுள்ஸ்”, “அவள் பாவம்”, “நினைக்காத நாளில்லை” ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் கே.ராஜன். இவர் “நம்ம ஊரு மாரியம்மா”, “உணர்ச்சிகள்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் “உளவுத்துறை”, “வீட்டோட மாப்பிள்ளை”, “பாம்புச் சட்டை” போன்ற பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
சமீப காலமாக பல சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும் கே.ராஜன், சினிமா துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் பலரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் “கட்சிக்காரன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதனுக்கும் கே.ராஜனுக்கும் கடும் சண்டை நிலவியது. அப்போது கே.ராஜன், பயில்வான் ரங்கநாதனை மிகவும் கடுமையான சொற்களால் வசைப்பாடினார். இந்த சம்பவம் இணையத்தில் சமீப நாட்களாக வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன், கே.ராஜன் குறித்து கடுமையாக பேசியுள்ளார். அதில் “உப்மா கம்பெனிகள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு புரோமோஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கே.ராஜன் கசமுசா என்று பேசுவார். கே.ராஜன் முதலில் தயாரிப்பாளராக இருந்து மூன்று மொக்கை படங்களை எடுத்தவர்.
தமிழ் வாத்தியாராக இருந்து ஒரு தனியார் பள்ளிக்கூடத்தை தொடங்கிய ராஜன், அந்த பள்ளிக்கூடத்தை மெட்ரிக்குலேஷன் பள்ளியாக மாற்றினார். அப்படி என்றால் அவர் எவ்வளவு பணத்தை கட்டணமாக வாங்கி தயாரிப்பாளராக வந்திருக்கிறார் என்பதை பாருங்கள்” என பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நம்பியார் ஹீரோவா நடிச்சிருக்காரா?? இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!!
மேலும் பேசிய அவர் “கே.ராஜன் தனது முதல் படத்தை வெளியிடும்போது இப்போது திருப்பூரைச் சேர்ந்த மிகப்பெரிய பிரமுகராக இருக்கும் விநியோகஸ்தர் ஒருவர் ராஜனின் படத்தை வாங்க முடிவெடுத்தார். பேசிய பணத்தை கொடுத்து முடித்தப் பிறகு ‘இன்னும் அதிக பணம் கொடுத்தால்தான் நான் படத்தை கொடுப்பேன், இல்லை என்றால் விஷத்தை குடிப்பேன்’ என தனது முன்னால் விஷ பாட்டிலை வைத்து படுத்துவிட்டார்.
கே.ராஜன் படம் தயாரித்ததால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என கூறுகிறார். ஆனால் பல திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்ததாகவும் கூறுகிறார். அந்த பணம் எல்லாம் நஷ்டமாகிவிட்டது என்கிறார். அவ்வளவு பணம் ஃபைனான்ஸ் கொடுத்து திருப்பி வரலைன்னா ராஜன் ஒரு இளிச்சவாயன் என அர்த்தம்” என்று அப்பேட்டியில் கே.ராஜனை குறித்து மிக கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.