நான் அந்த உறவில் இருந்திருக்கிறேன்!.. வெளிப்படையாக கூறிய அஞ்சலி..ஆனாலும் அம்மணிக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்..

Published on: December 19, 2022
anjali_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக இருந்தவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி. தமிழ்,தெலுங்கு உட்பட மொழிகளில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார் அஞ்சலி.

anjali1_cine
anjali

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்று நடிப்பிற்கு பேர் போன நடிகை என்ற லிஸ்டில் சேர்க்கப்பட்டார். ஏனோ வந்தோம் ஏதோ நடித்தோம் என்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே நடித்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : ‘லவ் டுடே’ வெற்றியின் மூலம் கிடைத்த லக்!.. மொத்தமா அறுவடை செய்த நடிகை இவானா!

மேலும் நடிகர் ஜெய்யுடன் பல வகைகளில் கிசுகிசுக்கப்பட்டார். அதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முற்றிலுமாக மறுத்தார் அஞ்சலி. மேலும் நடிகை என்றாலும் பப்ளிக் ஃபிகராக மாறிவிடுகிறோம். அதனால் மக்கள் யாருடன் சேர்த்து வைச்சு ஆசைப்படுகிறார்களோ அதையே பத்திரிக்கைகளில் செய்தியாக வருகிறது. அதை என்னால் எதுவுமே செய்யமுடியாது என்றும் கூறியிருக்கிறார்.

anjali2_cine
anjali

மேலும் ஓடிடியில் சமீபத்தில் ரிலீஸான ஃபால் என்ற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அதே வேளையில் பல முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும் எனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று கேட்டும் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அஞ்சலியிடம் டாக்சிக் உறவு அனுபவம் இருக்கிறதா என்று கேட்க கொஞ்சம் கூட தயங்காமல் ஆமாம் இருந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். டாக்சிக் உறவு என்பது ஒரு வகை லிவிங்க் ரிலேஷன்ஷிப் மாதிரியான ஒரு உறவு ஆகும். இதில் இருந்திருக்கிறேன் என்றும் ஆனால் பெயர் சொல்லமாட்டேன் என்றும் நான் கற்பனை செய்த மாதிரி அந்த உறவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

anjali3_cine
anjali

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.