Connect with us
Ilaiyaraaja

Cinema History

சம்பளமே வாங்காமல் இளையராஜா இசையமைத்த படங்கள்… பின்னாளில் மெகா ஹிட்…

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைஞானத்தை குறித்தும் அவரது பெருமைகள் குறித்தும் தனியாக கூறவேண்டிய அவசியமே இல்லை. 3 தலைமுறை ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜாதான்.

பண்ணைபுரத்தில் இருந்து தொடங்கிய அவரது பயணம், தற்போது பாராளுமன்றத்தை எட்டியிருக்கிறது என்றால் இளையராஜாவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் அதனை பார்க்க முடியும். 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த பெருமைக்குச் சொந்தக்காரர். இவ்வாறு இளையராஜாவின் புகழை குறித்து சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.

Ilaiyaraaja

Ilaiyaraaja

இளையராஜா முதன்முதலில் இசையமைத்து வெளிவந்த திரைப்படம் “அன்னக்கிளி”. தனது முதல் திரைப்படத்திலேயே தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் இளையராஜா. அதன் பின் தொட்டதெல்லாம் வெற்றிதான். தமிழ் சினிமா இசை உலகில் இளையராஜாவுக்கென்றே ஒரு தனி மார்க்கெட் வளர்ந்தது. அவரது இசைக்காக பல தயாரிப்பாளர்கள் கியூவில் நின்றார்கள். அந்த அளவுக்கு பிசியான இசையமைப்பாளராக திகழ்ந்தார் இளையராஜா.

இந்த நிலையில் இளையராஜா தனது திரைப்படங்களில் சம்பளமே வாங்காமல் பணியாற்றியது குறித்து மறைந்த இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Prathap Pothen

Prathap Pothen

1989 ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வெற்றிவிழா”. இத்திரைப்படம் மாபெறும் ஹிட் அடித்தது மட்டுமன்றி, இளையராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சக்கை போடு போட்டன.

இதையும் படிங்க: “ரஜினியை கட்டி வச்சி அடிக்கனும்”… ஷூட்டிங்கையே நிறுத்திய தயாரிப்பாளர்… இப்படி எல்லாம் நடந்திருக்கா??

Vetri Vizha

Vetri Vizha

குறிப்பாக “மாறுகோ மாறுகோ”, “பூங்காற்று உன் பேர் சொல்ல” ஆகிய பாடல்கள் காலத்துக்கும் ரசிகப்படும் பாடல்களாக அமைந்தன.  இந்த நிலையில் “வெற்றி விழா” திரைப்படத்திற்கு இசையமைக்க இளையாராஜா சம்பளமே வாங்கவில்லையாம்.

Ilaiyaraaja and Prathap Pothen

Ilaiyaraaja and Prathap Pothen

அதே போல் 1981 ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் நடிப்பில் பி.வாசு-சந்தான பாரதி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பன்னீர் புஷ்பங்கள்”. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட். குறிப்பாக “கோடை கால காற்றே”, “ஆனந்த ராகம்” ஆகிய பாடல்கள் காலம் தாண்டி நிற்கும் பாடல்களாக அமைந்தது. இந்த நிலையில் “பன்னீர் புஷ்பங்கள்” திரைப்படத்திற்கும் இளையராஜா சம்பளமே வாங்கவில்லையாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top