“எல்லாமே போயிடுச்சு… வாடகை வீட்லதான் இருக்கேன்”… கஞ்சா கறுப்புக்கு இப்படி ஒரு அவலநிலையா?? அடப்பாவமே!!

Published on: December 24, 2022
Ganja Karuppu
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் கஞ்சா கறுப்பு. ஒரு யதார்த்த கிராமத்து கலைஞனாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கஞ்சா கறுப்பு “பிதா மகன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின் “ராம்”, “பருத்திவீரன்” போன்ற பல திரைப்படங்களில் காமெடி ரோலில் வந்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

Ganja Karuppu
Ganja Karuppu

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு கஞ்சா கறுப்பு “வேல்முருகன் போர்வெல்ஸ்” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக சொந்தமாகவே போர்வெல் வாங்கினார் கஞ்சா கறுப்பு. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பொருளாதார சிக்கல் காரணமாக பாதியில் நின்றபோது, அத்தனை படங்களிலும் நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய தனது சொந்த வீட்டை விற்று படப்பிடிப்பை முடித்தார்.

எனினும் “வேல்முருகன் போர்வெல்ஸ்” திரைப்படம் படு தோல்வி அடைந்ததால், மிகப்பெரிய கடனில் மூழ்கினார் கஞ்சா கறுப்பு. இந்த நிலையில் ஒரு விழா மேடையில் பேசிய அவர்,

இதையும் படிங்க: இந்த படத்துக்காக கமல் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? உலக நாயகனின் மெய் சிலிர்க்கவைக்கும் டெடிகேஷன்…

Ganja Karuppu
Ganja Karuppu

“சொந்தமா படம் பண்ணி மாட்டிக்காதீங்கன்னு ஆரம்பத்திலேயே என்கிட்ட சொன்னாங்க. பாதி வெள்ளத்துக்குள்ள போனதுக்கு அப்பறமாத்தான் நம்ம மாட்டிக்கிட்டோம்ன்னு தெரிஞ்சது. மலேசியாவில் இருந்த மேனேஜர் ஒருவர், இந்த படம் பட்ஜெட் அதிகமாக இழுக்கும் என இயக்குனரிடம் சொன்னாராம். அதற்கு இயக்குனர் ‘எதையும் தாங்கும் இதயமான கஞ்சா கறுப்பு இருக்கிறார், அவர் தாங்கிக்கொள்வார்’ன்னு சொல்லிருக்கிறார்.

கடைசியில் போர்வெல் போர்வெல்ன்னு போர்வெல் போட்டு, நான் உழைச்சி சம்பாதிச்ச காசுல, பாலா அமீர் இல்லம்ன்னு வச்சிருந்த என் இல்லத்தையே வித்துட்டு, இப்போ வாடகை வீட்ல குடியிருக்கிறேன். ஆனால் அதை பற்றியெல்லாம் நான் கவலை படவில்லை. நான் தொலைத்தது சினிமாவில், தேடுவதையும் சினிமாவில்தான் தேடுவேன். இன்னும் நூறு படம் பண்ணுவேன்” என மனம் நொந்தபடி தனது ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.