Connect with us
NS Krishnan

Cinema News

உடல்நலமின்றி படுத்திருந்த கலைவாணர்… தலையணைக்கு அடியில் இருந்து வெளிவந்த பணம்!! யார் வந்தது தெரியுமா??

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கொடை உள்ளம் குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். கலைவாணர் என்று புகழப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் தொடக்கத்தில் நாடகத் துறையில் நடிகராக இருந்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வால் பலரையும் ரசிக்க வைத்தவர் என்.எஸ்.கே.

NS Krishnan

NS Krishnan

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த “மேனகா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் “சதிலீலாவதி”, “அம்பிகாபதி”, “கிருஷ்ணன் தூது”, “திருநீலகண்டர்” என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். உதவி என்று யார் வந்து கேட்டாலும் தயங்காமல் அள்ளிக் கொடுப்பவர் கலைவாணர். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்துதான் தனக்கு வந்ததாக ஒரு முறை எம்.ஜி.ஆர் கூறினாராம். அந்த அளவுக்கு வாரி வளங்கும் வள்ளலாக திகழ்ந்திருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன்.

இவ்வாறு தமிழ் சினிமாவின் பழம்பெரும் கலைஞராக திகழ்ந்த என்.எஸ்.கே, 1957 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 30 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தபோது ஒரு நாள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது திடீரென கண்முழித்த என்.எஸ்.கே. தனது அருகில் இருந்த மனைவியிடம் “எம்.ஜி.ஆர் வந்தாரா?” என கேட்டிருக்கிறார்.

MGR

MGR

அதாவது என்.எஸ்.கே உறங்கிக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். ஆனால் உறங்குகிறவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணிய எம்.ஜி.ஆர் அவரை எழுப்பாமல் வெளியே சென்றுவிட்டிருக்கிறார்.

MGR and NSK

MGR and NSK

இந்த நிலையில் தூங்கிக்கொண்டிருந்த என்.எஸ்.கேக்கு எம்.ஜி.ஆர் வந்தது எப்படி தெரியும் என அவரது மனைவிக்கு வியப்பு ஏற்பட்டிருக்கிறது. “உங்களுக்கு எப்படி எம்.ஜி.ஆர் வந்தது தெரியும்?” என அவர் மனைவி கேட்க அதற்கு என்.எஸ்.கே. தனது தலையணை அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு பணக்கட்டை சுட்டிக்காட்டி “தலைகாணிக்கு அடியில் இவ்வளவு பணத்தை எம்.ஜி.ஆர் தவிர்த்து வேற யார் வச்சிட்டுப்போவாங்க” என கூறினாராம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆருக்கும் கலைவாணருக்குமான புரிதல் இருந்திருக்கிறது.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top