தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தன் உடல் அசைவுகளால் காமெடியில் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் நாகேஷ். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கும் மேல் நடித்த நாகேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திரையில் ஏற்ற ஜோடியாக நடிகை மனோரமா திகழ்ந்தார்.

இவர் நடித்த அநேகமான படங்களில் நாகேஷுக்கு மனோரமா தான் ஜோடி. நாகேஷ் திரைத்துறையில் வருவதற்கு முன் அவரின் அப்பா வேலையான ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் அவருக்கு நீடிக்க வில்லை.
இதையும் படிங்க : கண்ணதாசனின் பாட்டை தவறாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… அப்போ இத்தனை நாள் தப்பாத்தான் பாடுறோமா!!
ஏனெனில் சினிமா மீது அவர் கொண்ட அதீத காதல். அதன் காரணமாக நாடகத்தில் சேர்ந்தார். அமெச்சூர் நாடகத்தில் சேர்ந்து டாக்டர் நிர்மலா என்ற நாடகத்தில் தை தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் விளைவாக தான் திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவரை அவர் வீட்டில் குண்டப்பா என்றே அழைப்பார்களாம்.

நாகேஷ் நடித்த முதல் படம் தாமரைக்குளம். அதன் பின் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தை நாகேஷ் பெற்றார். ஒரு சமயம் நாகேஷ் நடிக்க வந்த புதிதில் வாலியிடம் இவரை அறிமுகம் செய்து வைத்தாராம் வாலியின் நண்பர்.
இதையும் படிங்க : வாரிசு மேடையில் அரசியல் பேசாத விஜய்!.. காரணமாக இருந்த பிரபல அரசியல் பிரமுகர்?..
நாகேஷை வாலி பார்த்ததும் ஒரே ஆச்சரியமாம். ஏனெனில் சினிமாவில் நடிக்கக்கூடிய எந்த தகுதியும் அவரின் முகத்தில் இல்லையாம். இதனால் வாலி நேராகவே நாகேஷை இதற்கு முன் உன் முஞ்சியை கண்ணாடியில் பாத்திருக்கியா? எந்த தகுதியில் நடிக்க வந்தாய்? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு நாகேஷ் நீங்க எந்த தகுதியில் பாடல் எழுத வந்தீர்களோ அதே தகுதியில் தான் நானும் வந்தேன் என்று கூறியிருக்கிறார். இவர் இப்படி சொன்னதில் இருந்தே வாலியும் நாகேஷும் நெருங்கி பழகக்கூடிய நண்பர்களாக மாறிவிட்டார்களாம். ஆகவே லட்சியத்தை அடைய உடற்தகுதியை விட திறமை இருந்தால் போதும் என்பதற்கு நாகேஷ் சிறந்த உதாரணம் என்று வாலி கூறினார்.
