
Cinema News
சார்பட்டா பரம்பரைக்கும் மதன்பாபுவுக்கும் சம்பந்தம் இருக்கு!.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!..
Published on
By
பூர்வீக சென்னைவாசிகள் வாழும் வடசென்னையில் பல விளையாட்டுகள் பிரபலம். குறிப்பாக குத்துச்சண்டை அங்கே மிகவும் பிரபலம். 70,80 வருடங்களுக்கும் மேல் வட சென்னைவாசிகளில் பலரும் குத்துச்சண்டை பயின்று வந்தனர்.
குத்துச்சண்டையில் அங்கு பல பிரிவுகளும் இருந்தது. பரம்பரை பரம்பரையாக அந்த போட்டியும், பகையும் தொடரும். இதை மையப்படுத்தித்தான் இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் பசுபதி குத்துச்சண்டை பயிற்சியாராகவும், ஆர்யா குத்துச்சண்டை வீரராகவும் நடித்திருந்தனர். ஜெயம்ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தின் கதை கூட இதை மையப்படுத்திதான் இருக்கும்.
சரி விஷயத்திற்கு வருவோம். நடிகர் மதன் பாப்பை எல்லோருக்கும் தெரியும். வித்தியாசமாக சிரித்து சிரித்து ரசிகர்களை கவர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட மேலும், கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தியுள்ளார்.
ஆனால், இவரை பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் இவர் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதுதான். அதுவும் சார்பட்டா பரம்பரை வழி வந்தவர் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால், அதுதான் உண்மை.
madhan
இசையில் ஆர்வம் இருந்தது போலவே இவருக்கு குத்துச்சண்டையில் ஆர்வம் உண்டு. குத்துச்சண்டைக்கான பயிற்சிகளையும் பெற்றார். அதற்கேற்ப உடம்பையும் ஏற்றினார். ஆனால், இசை, நடிப்பு என அவரின் கேரியர் மாறிவிட்டது. தற்போது அவருக்கு பேரக்குழந்தைகள் பிறந்துவிட்டாலும் பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார் எனில் அதற்கு உதவுவது அவரின் உடல் அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபுல் மப்பில் அறைக்கதவை திறக்காத கார்த்திக்.. அவரின் மனைவி என்ன செய்தார் தெரியுமா?..
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...