
Cinema News
இப்படித் தான் உடல் எடையைக் குறைத்தாரா…விஜய் சேதுபதி…!? பயில்வான் ரங்கநாதனின் அறிவுரை
Published on
மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. மாஸ்டர், விக்ரம், மாமனிதன், டிஎஸ்பி என வேற லெவலில் தமிழ்சினிமாவில் கலக்கிக் கொண்டு இருக்கும் நடிகர் விஜய்சேதுபதி.
இன்றைய முன்னணி நட்சத்திரங்களுக்கே இவரது அபரிமிதமான வளர்ச்சி சவால் விடும் நிலையில் உள்ளது. அப்படி ஒரு அசுரத்தனமான வளர்ச்சி. புதுப்பேட்டையில் அடியாள்களில் ஒருவராக அப்பாவித்தனமாக வருவார்.
Vijay sethupathi in Pudupettai
இப்போது இப்படி ஒரு வளர்ச்சி என்றால் அவரது கடின உழைப்பு தான் அதற்குக் காரணம். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வெறி அவரது பல படங்களில் நாம் பார்க்கலாம். எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் தனது அசால்டான பேச்சால் இயல்பாக நடித்து அசத்துவதில் வல்லவர்.
இவரது குரலும் ஒரு பிளஸ் பாயிண்ட். சமீப நாள்களில் இவர் படங்களைப் பார்த்தோமானால் உடல் எடை அதிகரித்துள்ளது நல்லா தெரியுது. இவரது வெற்றிக்குக் காரணம் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான். 2023ல் இவர் அகில உலக லெவலுக்குச் சென்று விடுவார். அப்படிப்பட்ட பல படங்கள் வர உள்ளன.
யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, பிசாசு2, காந்தி டால்க்ஸ், மும்பைக்கர், 19, இடம்பொருள் ஏவல், ஜவான், புஷ்பா2 ஆகிய படங்கள் தான் வர உள்ளன. இவை அனைத்தும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளன.
ரொம்பவே பரபரப்பாக சுற்றிக் கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் படு பிசியான நடிகர். வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டுள்ளார்.
24 மணி நேரமும் விமானத்தில் பறந்து நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன்காரணமாக அவருக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் உடம்பு உப்பி விட்டது.
Vijay sethupathi
இதன் காரணமாக நண்பர்களில் பலர் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள். எல்லா நடிகர்களும் ஒல்லியாக இருக்காங்க. நீங்க மட்டும் தடியா இருக்கீங்கன்னு அவருக்கிட்ட ஆலோசனை சொன்னதும் விஜய் சேதுபதி தற்போது ஒல்லியாகி விட்டார்.
அதெப்படி திடீர்னு இவ்ளோ ஒல்லி என்று எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் யூடியூபில் விஜய் சேதுபதிக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் நடிகர் என்பதால் சொல்கிறேன்.
vijaysethupathi 2
தினமும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துக் கொள்ளுங்க. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், காதல் இளவரசன் கமலும் உடற்பயிற்சி செய்தே உடல் எடையைக் குறைத்துள்ளனர்.
இந்த ரசாயன மருந்து சாப்பிடுறது, ஊசி போடுவதன் மூலம் எடையைக் குறைப்பது பின்னால பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...