Connect with us
Bharathiraja and Bhagyaraj

Cinema History

இளையராஜா ஸ்டூடியோவில் பாக்யராஜ்ஜை லெஃப்ட் ரைட் வாங்கிய பாரதிராஜா… யார் காரணம்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!!

பாக்யராஜ் சினிமாவிற்கு வந்த புதிதில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துகொண்டிருந்தார். “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பாக்யராஜ் “சிகப்பு ரோஜாக்கள்”  திரைப்படத்தில் வசனக்கர்த்தாவாக பணியாற்றினார்.

அதனை தொடர்ந்து “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் பாக்யராஜ்ஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதனை தொடர்ந்து பாக்யராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் உருவானார்.

Bharathiraja and Bhagyaraj

Bharathiraja and Bhagyaraj

இந்த நிலையில் ஒரு முறை இளையராஜாவின் ஸ்டூடியோவில் பாக்யராஜ்ஜை பாரதிராஜா கண்டபடி திட்டிய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

பாரதிராஜா இயக்கிய “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தனது நெருங்கிய நண்பர் ஒருவரை இளையராஜாவை பார்ப்பதற்காக அழைத்து வந்திருந்தாராம் பாக்யராஜ். இளையராஜா அப்போது சில ராகங்களை இசைத்துக்கொண்டிருக்க அதனை கண்கொட்டாமல் ஆவென பார்த்துக்கொண்டிருந்தாராம் அந்த நண்பர்.

அப்போது உள்ளே நுழைந்த பாரதிராஜா, “யார் இவன்” என கேட்டாராம். அதற்கு பாக்யராஜ், “இவன் என்னோட ஃபிரண்டு. என் கூட படிச்சான். இளையராஜாவை பாக்கனும்ன்னு ரொம்ப அடம்பிடிச்சான். அதான் சார் கூப்பிட்டு வந்தேன்” என கூறினாராம்.

Bharathiraja

Bharathiraja

இதனை கேட்டவுடன் ஆத்திரப்பட்ட பாரதிராஜா “யோவ். எவன் எவனையோ கூப்பிட்டு வந்து உட்கார்ந்துருக்க. என்ன விளையாடுறயா நீ?” என கத்தினாராம். அதற்கு பாக்யராஜ் “இல்ல சார், ராஜா சாரை பாக்கனும்ன்னு ரொம்ப பிரியபட்டான் சார்” என்றாராம்.

இதையும் படிங்க: மும்முரமாக நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பு… ஐட்டம் சாங்கிற்கு நடனமாடிய பாரதிராஜா… இவ்வளவு விளையாட்டுத்தனமாவா இருக்குறது??

R Sundarrajan

R Sundarrajan

“அதுக்காக நீ எவனை வேணாலும் கூப்புட்டு வந்து உட்காரவைப்பியா? நீ முதல்ல வெளியில போ” என கூறினாராம். இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது பாக்யராஜ்ஜின் நண்பர் இளையராஜா இசையமைப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாராம். அந்த நண்பர் வேறு யாருமில்லை, பின்னாளில் தமிழின் முன்னணி இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்த ஆர். சுந்தரராஜன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top