சன்னி லியோனியின் அடுத்த அவதாரம்! சிரிக்க வைப்பாரா ?

3a416c8d037e55ebb1e258de6ce98a22-1

பிரபல நடிகையான சன்னி லியோன் உருவாகி வரும் காமெடி வெப் சீரிஸீல் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன் பாலியல் படங்களில் நடித்ததன் மூலம் உலகெங்கும் புகழடைந்தார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அந்த படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தி மற்றும் தென் இந்திய படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் பாலிவுட்டிலும் கிளாமர் கேர்ளாகவே இதுவரை சுற்றி வந்த அவர் இப்போது முதல்முறையாக காமெடி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த காமெடி தொடர் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் தனக்கான சம்பளத்தை மும்பையில் உள்ள செயின்ட் கேத்தரின்ஸ் அனாதை இல்லத்துக்கு கொடுக்க இருக்கிறார் அவர்.

Categories Uncategorized

Leave a Comment